நயன்தாரா போல் இருக்கும் பெண்ணை நடிக்க வைத்துள்ளார்கள்.! விக்னேஷ் சிவன் கிண்டல் பதிவு

0
72

நயன்தாரா போல் இருக்கும் பெண்ணை நடிக்க வைத்துள்ளார்கள்.! விக்னேஷ் சிவன் கிண்டல் பதிவு

கோலிவுட்டின் நெக்ஸ்ட் ஜெனெரேஷன் இயக்குனர்களில் முக்கியமானவர் விக்கி. இளசுகளின் பேவரைட் இயக்குநர் என்று பெயரெடுத்து விட்டார். இவருக்கு இன்னொரு முகமும் உள்ளது. நயன்தாராவின் பாய் பிரென்ட், காதலர், ஹவுஸ் – மேட், பாவொரிட் இயக்குனர், மென்டோர் என்று எப்படி வேண்டுமாலும் இவரை அழைக்கலாம். மனிதர் ஸ்டைலிஷ் மற்றும் ட்ரெண்டியானவர். ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாக்ராம்மில் ஆக்டிவாக இருப்பவர்.

vignesh shivan birthday
vignesh shivan birthday

சர்ஜூன் இயக்கியுள்ள ஹாரர் திரில்லர் ஜானர் படத்தில் நயன்தாரா, கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ளனர். நயனுக்கு படத்தில் டூயல் ரோல். அதிலும் ஒரு ஷேட் புல் பிளாக் டோன்னில் வில்லேஜ் சப்ஜெக்ட் தான். போஸ்டர் வந்த சமயத்தில் இருந்தே ரசிகர்கள் ஆர்வத்தை தூண்டியது.

கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையில் சமீபத்தில் மேகதூதன் சிங்கிள் பாடல் லிரிகள் வெளியானது. அதனை பற்றி தான் இயக்குனர் விக்கி ட்வீட் தட்டியுள்ளார்.

“அருமையான பாடல் ஐரா படத்தில் இருந்து. தாமரை மேடம் ஒவ்வொரு பாடல் வாயிலாகவும் நம்மை ஆச்சிர்யப்பட வைக்கிறார். ஜீனியஸ் அவர். இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு மற்றோரு ஹிட் ஆக அமைய வாழ்த்துக்கள். நயன்தாரா போலவே உள்ள பெண்ணை நடிக்க வைத்துள்ளது சுவாரஸ்யமாக உள்ளது.” என தன் காதலியை கிண்டல் செய்யும் விதமாக முடித்துள்ளார்.