படத்தில் வாய்ப்பு கேட்ட கருணாகரன்.! விஜய் சொன்ன பதில்.! அதனால் தான் அவர் தளபதி

0
415

Karunakaran : தன்னை கண்டபடி விமர்சனம் செய்த கருணாகரன் படத்தில் வாய்ப்பு கேட்க அவர் கொடுத்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜயை சர்கார் பட சர்ச்சையின் போது மோசமாக விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கியவர் கருணாகரன்.
அதன் பிறகு விஜய் ரசிகர்கள் அவரை வறுத்தெடுத்தது மட்டுமில்லாமல் அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர்.

அதனை தொடர்ந்து தான் பேசிய வார்த்தைகளுக்கு கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு கேட்டு இருந்தார்.தற்போது விஜய்யிடம் வாய்ப்பு கேட்க அவர் நிச்சயம் இணைந்து பணியாற்றலாம் நண்பா என கூறியுள்ளார். இந்த தகவல் விஜய் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

கருணாகரனுக்கு நண்பன் படத்தின் போதே வாய்ப்பு கிடைத்தது. அப்போது பிஸியாக இருந்ததால் தவற விட்டார். அதன் பின்னர் கிடைத்த புலி பட வாய்ப்பையும் அவர் மிஸ் செய்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.comedian-karunakaran