கம்பீரமாக இருந்த விஜயகாந்தா இது.! வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி

0
70

vijayakanth : நடிப்பில் கலக்கிய விஜயகாந்த் அதன் பின் அரசியலில் கால் வைத்தார். அரசியில் கால் வைத்த சிறிது காலத்திலே மிகப் பெரிய கட்சியாக தேமுதிக வந்தது. எதிர்கட்சி அந்தஸ்து கூட கிடைத்தது. இப்படியே சென்றால், தேமுதிக தமிழகத்தில் மிகப் பெரிய பலமான கட்சியாக மாறிவிடும் என்று ஒரு விவாதமே சென்றது.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே விஜயகாந்த் உடல்நல பிரச்சனை காரணமாக இரண்டு முறை அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். இருப்பினும் அவர் உடல்நிலை முன்பு இருந்ததை போல மாறவில்லை.

அவர் துவங்கிய கட்சி தற்போது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நிலையில், அதில் பிரச்சாரம் செய்ய விஜயகாந்த் வரவில்லை. அவர் இன்னும் இரண்டு நாட்களில் பிரச்சாரத்திற்கு வருவார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது அவரது டுவிட்டர் திடீரென்று விஜயகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விஜயகாந்த் தன் கட்சிக்கு வாக்களிக்குமாறு கேட்கிறார். அந்த சில வரிகளை பேச அந்த வீடியோவில் மொத்தம் 6 கட் உள்ளது.

ஒரு காலத்தில் கம்பீரமாக படத்தில் நடித்தவர், மேடைகளில் பேசியவர் இப்போது பேசவே முடியாத நிலையில் இருக்கிறாரே என்று வீடியோவைப் பார்த்து கலங்கியுள்ளனர்.