தயவுசெஞ்சு அப்படிலாம் எதுவும் பண்ணிடாதிங்க..! இயக்குனருக்கு விஜய் கட்டளை..!

0
197

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து தனது 63-வது படத்தை இயக்கம் வாய்ப்பை இயக்குனர் மோகன் ராஜா அவர்களுக்கு கொடுத்துள்ளாராம்.

vijay_tamil360newz
vijay_tamil360newz

ஏற்கனவே, விஜய்  மோகன்ராஜா கூட்டணியில் வெளியான வேலாயுதம் படம் நல்ல வரவேற்ப்பை பெற்றாலும் ஒரே ஒரு விஷயம் மட்டும் ரசிகர்களாள் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது என்ன விஷயம் என்று இறுதியில் பார்க்கலாம்.

இந்நிலையில், தளபதி63 படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் தீவிரமாக முழ்கியுள்ள மோகன்ராஜா நடிகர் விஜய்யிடம் உங்களுக்கு ஏற்றார் போல சில மாஸ் விஷயங்களை கதையில் சேர்க்கவுள்ளேன் என்று கூறியுள்ளார். இதனை கேட்ட விஜய், தயவுசெஞ்சு அப்படி எதுவும் பண்ணிடாதிங்க..! கதை எப்படி வந்தா நல்லா இருக்குமோ, அப்படி எழுதுங்க..! எனக்காக எந்த விஷயத்தையும் சேர்க்கவோ, நீக்கவோ வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.

இதனால், கதைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து மாஸ் விஷயங்களை சற்றே குறைத்துள்ளாராம் மோகன்ராஜா. இப்போது, வேலாயுதம் படத்தில் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளமுடியாத அந்த விஷயத்தை பார்க்கலாம். ஆம், இந்த படத்தின் கதையில் விஜய்க்கான மாஸ் விஷயங்கள் கொஞ்சம் அதிகமாக சேர்க்கப்பட்டிருந்தன. இது பெருவாரியான ரசிகர்களுக்கு பிடிக்காமல் போனது குறிப்பிடதக்கது. இதன் காரணமாகவே விஜய் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறுகிறார்கள்.