சீன கம்பெனிக்கு ஆப்பு வைத்த வியட்நாம் கம்பெனி.!

0
208

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் நுழையாத மொபைல் கம்பெனிகளே இல்லை என்று தான் கூறவேண்டும் . அதன் விளைவாக இரண்டு பிரதான விடயங்கள் நடந்தது. ஒன்று சீனா கம்பெனிகாரன் தான் பெஸ்ட் மொபைல் கொடுக்கிறான். இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் எல்லாம் வேஸ்ட் என்கிற மனநிலை உருவானது. இரண்டாவதாக, சீன கம்பெனிகளை போன்றே ஸ்மார்ட்போன்களை களமிறக்க வேண்டும் என்கிற முனைப்பின்கீழ் தொடர்ச்சியான முறையில், பல வகையான ஸ்மார்ட்போன்கள் (புதிய கம்பெனிகள் உட்பட) இந்தியாவிற்குள் அறிமுகமான வண்ணம் உள்ளது.
வந்து குவியும் ஸ்மார்ட்போன்களுக்கு இடையே.! நேற்று ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்கியிருந்தாலும் கூட, இன்று வெளியான மற்றொரு ஸ்மார்ட்போனை பார்த்தால், அட அவசரப்பட்டு வாங்கிட்டோமோ என்றே தோன்றுகிறது. அந்த அளவில் வந்து குவியும் ஸ்மார்ட்போன்களுக்கு இடையே, வியட்நாமை சேர்ந்த மொபிஸ்டார் எனும் நிறுவனம், இந்தியாவிற்குள் காலடி எடுத்து வைத்துள்ளது.

mobiistar
mobiistar

ஸ்னாப்டிராகன் 425 soc, டூயல் செல்பீ.!

ஸ்னாப்டிராகன் 425 soc, டூயல் செல்பீ.! இந்நிறுவனம் வெளியிட்டுள்ள இரண்டு ஸ்மார்ட்போன்கள் மீதான சுவாரசியம் என்னவென்றால், இது சீன கம்பெனிகளின் ஸ்மார்ட்போன்களை மட்டுமின்றி, அவைகளின் இந்திய விலை நிர்ணயத்தையும் ஆட்டம் காண வைத்துள்ளது. ஆம், வெறும் ரூ.4,999/-க்கு மற்றும் ரூ.7,999/-க்கு ஸ்னாப்டிராகன் 425 எஸ்ஓசி, டூயல் செல்பீ போன்ற பிரதான அம்சங்களை கொண்டுள்ளது. 4G VoLTE மற்றும் ViLTE ஆதரவு.!  மொபிஸ்டார் CQ மற்றும் மொபிஸ்டார் XQ டூயல் என்கிற பெயரின் கீழ் வெளியாகியுள்ள இரண்டு பட்ஜெட் நுழைவு நிலை ஸ்மார்ட்போன்கள் ஆனது, அம்சங்களின் படி, நுழைவு நிலை ஸ்மாட்ர்ட்போன்கள் போன்றே தெரியவில்லை. பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான ப்ளிப்கார்ட்டின் கீழ் பிரத்யேகமாகமாக வாங்க கிடைக்கும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே, 4G VoLTE மற்றும் ViLTE ஆதரவுடன் வருகின்றன.
மொபிஸ்டார் CQ அம்சங்கள்.! மொத்தம் இரண்டு விருப்பங்களின் கீழ் – கருப்பு மற்றும் தங்கம் ஆகிய நிறங்களில் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன், சியோமி ரெட்மீ 5ஏ, மற்றும் டென்னர் டி(10 or d)   ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு கடும் போட்டியை விளைவிக்கும் வண்ணம் வெளியாகியுள்ளது.

mobiistar-xq
mobiistar-xq

மொபிஸ்டார் cQ அம்சங்கள்.!

5 இன்ச் HD டிஸ்ப்ள,
க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 425 சிப்செட்,
2 ஜிபி அளவிலான ரேம் மற்றும் 16ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு,
128 ஜிபி வரை சேமிப்பு விரிவாக்கம் செய்யும் மைக்ரோ எஸ்டி கார்ட்
இரட்டை சிம் ஆதரவு
பின்பக்கத்தில் ஒரு 8 எம்பி கேமரா இருந்தாலும் கூட, முன்பக்கத்தில் 13 எம்பி அளவிலான செல்பீ கேமராவை கொண்டுள்ளது. இதன் கேமராக்களோ ஏழு நிலையிலான பியூடிப்பை மோட் கொண்டு வருகிறது. இது 1080p தரத்தில் வீடியோ பதிவையும் வழங்குகிறது.
4ஜி எல்டிஇ, வோல்ட், வைஃபை, ப்ளூடூத் 4.1 மற்றும் மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஓடிஜி ஆகிய இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ள இந்த மொபிஸ்டார் CQ, ஆண்ட்ராய்டு 7.1.2 நௌவ்கட் அடிப்படையிலான கஸ்டம் ஸ்கின் மேல் அடுக்கு கொண்டு இயங்குகிறது.
இது ஒரு 3020mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

mobiistar-xq
mobiistar-xq

மொபிஸ்டார் XQ அம்சங்கள்.!
நிறுவனத்தின் டூயல் செல்பீ ஸ்மார்ட்போன் ஆன இது,
5.5 இன்ச் முழு HD காட்சி டிஸ்பிளே,
2.5டி கர்வ்டு கிளாஸ் பாதுகாப்பு,
க்வால்காம் ஸ்னாப் 430 சிப்செட்,
3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு,
மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு,
3000mAh பேட்டரி,
ஆண்ட்ராய்டு 7.1.2 நௌவ்கட்,
4ஜி எல்டிஇ, வோல்ட், வைஃபை, ப்ளூடூத் 4.1 மற்றும் மைக்ரோ யூஎஸ்பி போர்ட், OTG
ஒரு 13எம்பி ஆர்பிஜி சென்சார் மற்றும் 120 டிகிரி FOV உடனான 8 எம்பி வைட் அங்கிள் கேமரா என்கிற டூயல் செல்பீ கேமரா அமைப்பை கொண்டுள்ளது.
பின் பக்கத்தில், எப் / 2.0 துளையுடனான ஒரு 13 எம்பி கேமரா உள்ளது.

மொபிஸ்டார் CQ மற்றும் மொபிஸ்டார் XQ-வின் விலை.!
தொடக்க நிகழ்வோடு சேர்த்து, இந்தியாவில் 100 சேவை மையங்களை திறந்துவிட்டதாக மோபிஸ்டார் அறிவித்துள்ளது. ஒற்றை மாறுபாட்டின் கீழ் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, மொபிஸ்டார் CQ ஆனது ரூ.4,999/-கும், மறுகையில் உள்ள மொபிஸ்டார் XQ டூயல் ஆனது ரூ.7,999/-க்கும் வாங்க கிடைக்கும். வருகிற மே 30, 2018 அன்று ப்ளிப்கார்ட் தளத்திலும் வாங்க கிடைக்கும். இந்த இரு ஸ்மார்ட்போன்களுக்கும் ப்ளிப்கார்டின் Complete Mobile Protection ஆனது ரூ.99/-க்கு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.