தவறான வீடியோவை வெளியிட்ட விஷால்.! கோவத்தில் வெளுத்து வாங்கிய வரலக்ஷ்மி சரத்குமார்.!

0
98

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால் இவர் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருக்கிறார், இந்த நிலையில் விஷால் அணி நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறது அதனால் தேர்தல் பிரச்சாரங்கள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழ் சினிமா பிரபலங்களில் விஷால் மட்டும் வரலட்சுமி இருவரும் நல்ல நண்பர்கள் ஆனால் இவர்கள் இருவரும் இடையில் காதலிக்கிறார்கள் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது அதுமட்டுமல்லாமல் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று தகவல் வெளியானது.

ஆனால் விஷாலுக்கு, அனிஷா என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டது. இந்த நிலையில் நடிகர் சங்கம் விஷயங்கள் குறித்து விஷால் ஒரு வீடியோ வெளியிட்டார், அதில் சரத்குமார் அவர்கள் பற்றி தவறான விஷயங்கள் கூறியுள்ளாராம்.

வீடியோவை பார்த்த சரத்குமார் மகள் வரலட்சுமி, எனது அப்பா இந்த முறை அந்த விஷயங்களில் இல்லை என்றாலும் அவரை தவறாக கூறியுள்ளீர்கள். நீங்கள் செய்த நல்லதை வெளிப்படுத்தாமல் தவறாக விமர்சனம் செய்கிறீர்கள். என்னுடைய ஓட்டை நீங்கள் இழந்துவிட்டீர்கள் என கோபமாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் வரலட்சுமி.