வடசென்னை- வெற்றிமாறனிடம் அமீர் வைத்த இரண்டு வேண்டுகோள்.!

0
88

வடசென்னை- வெற்றிமாறனிடம் அமீர் வைத்த இரண்டு வேண்டுகோள்.!

பொல்லாதவன், ஆடுகளம் தொடர்ந்து மீண்டும் இணைந்து மெகா ஹிட் படத்தை கொடுத்துள்ளனர் தனுஷ் மற்றும் வெற்றிமாறன். அன்புவாக தனுஷ் நன்றாக நடித்திருப்பார் என்று எதிர்பார்த்து சென்ற பலருக்கு ஏமாற்றமே.

vada-chennai
vada-chennai

தனுஷை காட்டிலும் சந்திரவாக ஆண்ட்ரியா, ராஜனாக அமீர், பத்மாவாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இந்த மூவரும் நற்பெயரை எடுத்துவிட்டனர்.

இந்நிலையில் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதைப் பற்றி இயக்குநர் அமீர் தகவல் ஒன்றை பிரபல நாளிதழுக்கு அளித்த பேட்டியில் சொல்லியுள்ளார்.“படத்தில் யார் காலிலும் விழற மாதிரி நடிக்கமாட்டேன். நடிகையோட நெருக்கமா நடிக்கமாட்டேன்.’ என்பதே அது .

அதற்கு இயக்குனர் வெற்றிமாறன், “நல்லா யோசிச்சுப் பார்த்தேன். நீங்க சொல்ற ரெண்டு விஷயமும் படத்தில் இருக்கு. கால்ல விழும் காட்சியைக் கூட மாத்திக்கலாம். ஆனா, நடிகையோட நெருக்கமா நடிக்கும் காட்சி இருக்கும். ஏன்னா கணவன் மனைவிக்குள்ள இருக்கும் நெருக்கம் படத்துக்கு தேவையானதா இருக்கு. ஸ்பாட்டுக்கு வாங்க பாத்துக்கலாம்.” என்று அந்த தகவலை பகிர்ந்துள்ளார் அமீர்.