வி.வி.எஸ் லக்‌ஷ்மண் தேர்வு செய்த உலககோப்பைக்கான அணி இதுதான்.!

0
91

வி.வி.எஸ் லக்‌ஷ்மண் தேர்வு செய்த உலககோப்பைக்கான அணி இதுதான்.!

2019 ஐம்பது ஓவர் உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வெல்லும் என முன்னாள் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2019 ஐம்பது ஓவர் உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் வரும் மே மாதம் தொடங்க உள்ளது. தொடக்கப் போட்டியில் இங்கிலாந்து – தென்னாப்ரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடந்துகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் தென்னாப்ரிக்காவை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன.

kohli
kohli

அனைத்து அணிகளும் உலகக் கோப்பை தொடருக்கு இப்போதிருந்தே தயார் செய்து வருகின்றன. சுமார் 5 மாதங்கள் உள்ள நிலையில், எந்த அணி உலகக் கோப்பை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்நிலையில், 2019 ஐம்பது ஓவர் உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வெல்லும் என முன்னாள் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மண் கணித்துள்ளார்.

மேலும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தனது பேவரைட் இந்திய அணியையும் லக்‌ஷ்மண் தேர்வு செய்து அதனை வெளிபடையாக அறிவித்துள்ளார். வி.வி.எஸ் லக்‌ஷ்மண் வெளியிட்டுள்ள 15 வீரர்கள் கொண்ட அணியில் இந்திய ஒருநாள் அணியில் வழக்கமாக விளையாடி வரும் அதே வீரர்களே இடம்பெற்றுள்ளனர்.

லக்‌ஷ்மண் தேர்வு செய்துள்ள அணி;

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கே.எல் ராகுல், விராட் கோஹ்லி, தோனி, அம்பத்தி ராயூடு, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ஜஸ்ப்ரிட் பும்ராஹ், கலீல் அஹமது, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ்.

lakshman
lakshman

தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகள் முன்னிலையில் உள்ளன. முதல் இடத்தில் இங்கிலாந்தும், 2-வது இடத்தில் இந்தியாவும் உள்ளது. இரு அணிகளும் 2018ல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளன. இந்த வரிசையில், கடைசி இரண்டு இடத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இருக்கின்றன.