சியர் கேர்ள்ஸே வேண்டாம்பா.. இவர் போதுமே.! வித விதமாக நடனம் ஆடும் அம்பயர் வைரல் வீடியோ!

0
93

சியர் கேர்ள்ஸே வேண்டாம்பா.. இவர் போதுமே.! வித விதமாக நடனம் ஆடும் அம்பயர் வைரல் வீடியோ!

கிரிக்கெட் விளையாட்டை பொறுத்தவரை மைதானத்தின் நடுவில் நிற்கும் பல அம்பயர்கள் முகத்தை இறுக்கமாகவே வைத்திருப்பார்கள். நோ பால், வைடு என எதற்கும் அவ்வளவு சீக்கிரம் அவர்கள் முகத்தில் இருந்து ஒரு ரியாக்‌ஷன் வந்தால் பெரிய விஷயம்தான்.

கிட்டத்தட்ட பரீட்சை அறையின் கண்காணிப்பாளர்கள் போல விறைப்பாக நிற்கும் அம்பயர்களை அதிகம் கண்டதாலோ என்னவோ மைதானத்தில் ஆட்டமாடி, சேட்டைகள் செய்யும் உள்ளூர் அம்பயர் ஒருவர் பலருக்கும் விநோதமாகத் தெரிந்துள்ளார். உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் விதவிதமான உடல்மொழிகளுடன் ஆட்டமாடியபடி மைதானத்தையே தெறிக்கவிடும் ஒரு அம்பயரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் ஒவ்வொரு முறை பந்து வீசும்போதும், நோ பால் போகும்போதும், பேட்ஸ்மேன் ரன் எடுக்கும்போதும் இந்த ‘சிகப்பு சட்டை’ அம்பயர் கொடுக்கும் ரியாக்‌ஷன்கள் எல்லாமே வேற லெவல்தான். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்த பலரும் பலவிதமான கமெண்ட்டுகளை கூறி வருகின்றனர்.

ஒருவர், இவரை நியூஸிலாந்தின் பில்லி பௌடனுடன் ஒப்பிடுகிறார். இன்னொருவர் ‘ஒரு அம்பயர் இவ்வாறான செயல்களைத் தவிர்த்து, ஜெண்டிலாக நடந்துகொள்ள வேண்டும்’ என்று காட்டமாக விமர்சித்துள்ளார். மற்றொருவர், ‘பேட்ஸ்மேன் ஓடவேண்டிய ரன்களை எல்லாம் இவரே ஓடி எடுத்துவிடுவார் போல’ என்று கூறி கலாய்த்துள்ளார். இதையெல்லாம் விட ஒரு இணையவாசி, ‘இந்த மாதிரி அம்பயர்கள் இருந்தால் விளையாட்டின் போது பக்கவாட்டில் நின்று கொண்டாட்ட தொனியில் ஆடச்செயும் நடனப்பெண்களே தேவை இல்லை’ என்று மரண கலாய் கலாய்த்துள்ளார்.

அந்த அளவுக்கு பார்ப்பவர்களை வசீகரிக்கும் இந்த அம்பயரின் ஆட்டத்துக்கு நடுவே தன் ஓவரில் மட்டுமே கவனத்தை வைத்துக்கொண்டு சின்சியராக பந்துவீசும் பவுலரையும், அருகில் நின்று ஆடுபவரை கூட கவனிக்காமல் ரன் எடுப்பதற்காக ஓடும் பேட்ஸ்மேனையும் இதே வீடியோவில் காணலாம்.