பச்சிளங்குழந்தைகாக திருச்சி டூ சென்னை வெறும் 4 மணி நேரத்தில் பறந்து வந்த ஆம்புலன்ஸ்

0
95

பச்சிளங்குழந்தைகாக திருச்சி டூ சென்னை வெறும் 4 மணி நேரத்தில் பறந்து வந்த ஆம்புலன்ஸ் | Ambulance

திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தை ஒன்றுக்கு இதயநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குழந்தையை காப்பாற்ற வேண்டுமென்றால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சென்னைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று குழந்தையின் பெற்றோருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

heart
heart

இதனையடுத்து சென்னைக்கு குழந்தையை எடுத்து செல்ல அதிநவீன ஆம்புலன்ஸ் தயாரானது. மேலும் ஆம்புலன்ஸ்கள் சங்கத்தின் வாட்ஸ் அப் குரூப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு திருச்சியில் இருந்து சென்னை செல்லும் போக்குவரத்தை சரிசெய்யவும் கேட்டுக்கொள்ளப்பட்டது

இதனையடுத்து திருச்சியில் இருந்து சென்னை வரை ஆங்காங்கே சுமார் 15 ஆம்புலன்ஸ்கள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முன் செல்ல, குழந்தையுடன் கூடிய ஆம்புலன்ஸ் அதன் பின்னால் சென்றூ 4 மணி நேரம் 10 நிமிடங்களில் திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்து சேர்ந்தது. தற்போது குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டதாகவும் இதற்கு உதவி செய்த ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றி என்று குழந்தையின் பெற்றோர்கள் கண்ணில் மல்க தெரிவித்துள்ளனர்.