22 வருடம் ஆகியும் ட்ரெண்ட் ஆகும் அஜித் விக்ரம் புகைப்படம்.!

0
158

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட படங்கள் நடித்துள்ளார். இவருக்கென்று சினிமாவில் ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு. ஆரம்பகாலத்தில் அஜித் பல தமிழ் நடிகருடன் சேர்ந்து நடித்துள்ளார், குறிப்பாக விஜய் மற்றும் விக்ரம்

நடிகர் விக்ரம் மற்றும் அஜித் சேர்ந்து நடித்த திரைப்படம் உல்லாசம். இந்த படத்தில் மகேஸ்வரி கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்திருந்தார்.

இந்த படத்தை தயாரித்தவர் ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகரான அமிதாப் பச்சன். அதன் பிறகு இவர் எந்த ஒரு தமிழ் படத்தையும் தயாரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட பிடிப்பின் போது எடுக்கப்பட்ட அஜித்,விக்ரம் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் இவரது ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

ajith-vikram
ajith-vikram