மனிதனுக்கு ஆம்புலன்ஸ் சேவை போல் மரங்களைக் காக்க ஆம்புலன்ஸ் சேவை.!!

0
32

மனிதர்களுக்கு அடி பட்டு விட்டாலோ அல்லது ஏதாவது எமர்ஜென்ஸி மருத்துவ சேவை தேவைப்பட்டாலோ உடனடியாக விரைந்து செல்வதற்கு ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது, அதேபோல் மரத்திற்கும் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கியுள்ளது பிரபல தனியார் நிறுவனம்.

மரங்களை வளர்க்கவும் இயற்கையை பாதுகாக்கவும் பல சமூக ஆர்வலர்கள் தீவிரமாக இருக்கிறார்கள் ஏனென்றால் நாளுக்கு நாள் மழை எதுவும் பெய்யாமல் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடிக் கொண்டு வருகிறது, அதனால் மரங்களை பாதுகாக்கவும் இயற்கையை பாதுகாகாக்கவும் மரங்களுக்கு ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கியுள்ளது கிண்டியில் உள்ள சாசா என்ற தனியார் நிறுவனம்.

இந்த வாகன சேவையை சமீபத்தில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு துவங்கி வைத்தார், அது மட்டுமில்லாமல் மரத்திற்கு ஆம்புலன்ஸ் சேவையை தொடர்ந்து மரங்களை வேரோடு இயந்திரம் மூலம் புடுங்கி வேறொரு இடத்தில் நட்டு வைக்கும் ஹைட்ராலிக் வாகனத்தை வாங்க இந்த தனியார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.