2018 ல் இந்தியாவில் கிடைக்கும் டாப்-5 டேப்ளெட்டுக்கள்.!

0
151

தற்போது ஸ்மார்ட்போன்களே பெரிய சைஸில் கிடைப்பதால் டேப்ளெட்டுக்களின் மார்க்கெட் சுருங்கி வருகிறது. எனவே டேப்ளட் தயாரிப்பாளர்கள் புதியதாக யோசித்து இதன் மார்க்கெட்டை விரிவுபடுத்தி வருகின்றனர். இதில் உள்ள பலவகையான கேட்ஜெட்டுக்கள் நிச்சயம் உங்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுக்கும். குறிப்பாக இபுக் படிக்கும்போது டேப்ளெட் மிகவும் வசதியானது. இது கிடைக்கும் அனுபவம் நிச்சயம் ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப்பில் படிக்கும் போது கிடைக்காது. நீங்கள் ஒரு டேப்ளட் விரும்பியாக இருந்தால் இதோ இந்தியாவில் கிடைக்கும் நவீன டெக்னாலஜியுடன் கூடிய டேப்ளட்டுகள் குறித்த விபரங்களை பார்ப்போம்

top5tablets-ok
top5tablets-ok

ஆப்பிள் ஐபேட் 6வது தலைமுறை:

ஆப்பிள் புரோ உள்பட ஆப்பிள் நிறுவனம் பல்வேறு ஐபேட் வகைகளை நமக்கு தந்துள்ளது. அதில் ஒன்றுதான் லேட்டஸ்ட் அதே நேரத்தில் அதிக விலையில்லாமல் அறிமுகமாகி இருக்கும் 6வது தலைமுறை ஆப்பிள் ஐபேட் இந்த டேப்ளெட் 32 ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜை கொண்டது. மேலும் இதில் வைபை மற்றும் 4ஜி வெர்ஷன்களும் உண்டு. இந்த 32ஜிபி வைபை டேப்ளெட்டின் விலை ரூ.28000 மட்டுமே. 4ஜி மாடல் எனில் அதன் விலை ரூ.35700. மேலும் 128 ஜிபி வைபை மாடல் விலை ரூ.38600 ஆகவும், இதே ஸ்டோரேஜில் 4ஜி எல்.டி.இ மாடலின் விலை ரூ.46300 என்பதிலும் கிடைக்கும் இதன் தன்மைகள் குறித்து பார்க்கும்போது இதுவொரு 6வது ஜெனரேஷன் ஏ10 ஃபியூஷன் சிப்செட்டை கொண்டது. 9.7 இன்ச் ஸ்க்ரீன் டச் ஐடி மற்றும் பிங்கபிரிண்ட் சென்சார், 8 எம்பி பின்கேமிரா மற்றும் ஃபேஸ் ஐடி வசதியுள்ள செல்பி கேமிரா ஆகியவை உண்டு. மேலும் 10 மணி நேரம் பேக்கப் வசதியுள்ள பேட்டரியும் இதில் உண்டு.

top5tablets-main
top5tablets-main

சாம்சங் டேப் எஸ்:

ரூ.47990 என்ற விலையில் கிடைக்கும் இந்த டேப்ளெட்டில் 4 ஸ்டீரியோ ஸ்பீக்கர், தானாக லேண்ட்ஸ்கேப் மற்றும் போட்ராய்டுக்கு மாறும் தன்மை ஆகிய வசதிகள் உண்டு. மேலும் இதில் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர் உள்ளது. 4 ஜிபி மற்றும் 32 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட இந்த டேப்பில் 256 ஜிபி வரையிலான மைக்ரோ எஸ்டி கார்டும் பயன்படுத்தலாம் 13 ம்பி பின்கேமிரா, 5 எம்பி செல்பி கேமிரா இதில் உள்ளது. எனவே வீடியோ காலிங் வசதியை பயன்படுத்தலாம். லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 7.0 நெளக்ட்டில் செயல்படும் இந்த டேப்ளட்டில் 6,000mAh பேட்டரி திறன் உள்ளது. வேகமாக சார்ஜ் செய்யப்படுவதுடன் 12 மணி நேர சார்ஜ் நிற்கும் கேரண்டியும் உண்டு. 4ஜி எல்.டி.ஈ, வைபை, புளூடூத் 4.2, யூஎஸ்பி டைப் சி மற்றும் ஜிபிஎஸ் வசதிகளை கொண்டது இந்த டேப்ளட். 237.3 x 169.0 x 6.0 mm டைமன்ஷன் கொண்ட இந்த டேப்ளட் 434 கிராம் எடையினை கொண்டது.

top5tablets-tmt
top5tablets-tmt

கிண்டில் ஒயாசிஸ் 7:

ரூ.5999 என்ற விலையில் இருந்து பலவகையான கிண்டில்கள் வெர்ஷன் கிடைக்கின்றது. ஆனால் இவற்றில் சிறந்தது கிண்டில் ஒயாசிஸ் மட்டும். இதில் இரண்டு மாடல்கள் உள்ளன. 8ஜிபி வைபை மாடல் விலை ரூ.21999 மற்றும் வைபை+3ஜி மற்றும் 32 ஜிபி ஸ்டொரேஜ் மாடலின் விலை ரூ.28999 7 இன்ச் மற்றும் 300 பிபி டிஸ்ப்ளே கொண்ட இந்த டேப் மற்ற டேப்ளெட்டுக்களை விட 30% அதிக வார்த்தைகள் இதில் தெரியும். இதனால் குறைந்த பக்கங்களை திருப்பினால் போதும். மேலும் இதில் ஐபிஎக்ஸ் 8 என்ற வாட்டர் புரூப் இருப்பதால் தண்ணீரில் இருந்து இந்த சாதனம் பாதுகாக்கப்படுகிறது. வயர்லெஸ் ஹெட்போன், வயர்லெஸ் ஸ்பீக்கர் ஆகியவைகளை புளூடூத் மூலம் இதில் இணைக்கலாம் மேலும் இதில் இரீடர் வசதிக்காக 30000 இலவச புத்தகங்களும், 2 மில்லியன் பெய்டு இபுக்ஸ்களும் இதில் உள்ளது. ரூ.,149 விலை முதல் அன்லிமிடெட் இபுக் வசதிகளை அமேசான் நிறுவனம் தருகிறது. அனைத்து கிண்டல் ஓசஸ் 8ஜிபி ஸ்டோரேஜ்களை கொண்டது. இதை தவிர 32 ஜிபி தன்மை கொண்டதும் கிடைக்கின்றது. இதில் முன்புறம் லைட் வசதி இருப்பதால் எழுத்துக்களை மிக எளிதில் படிக்க முடியும். மேலும் இந்த சாதனம் விரைவாக சார்ஜ் செய்யப்ப்டுவதுடன் அதாவது 2 மணி நேரத்தில் முழு சார்ஜ் செய்யப்படுகிறது. மேலும் இதில் உள்ள சார்ஜ் சுமார் ஒரு வாரத்திற்கு தாக்கு பிடிக்கும் வல்லமை கொண்டது. இந்த ஒயாசிஸ் ஈ-புத்தகம் ரீடர் என்பது பொது மற்றும் தனியார் வைபை நெட்வொர்க்குகள் அல்லது ஹாட்ஸ்பாட்டுகளுக்கு துணைபுரிகிறது, அவை 802.11b, 802.11g, அல்லது 802.11n தரநிலைகளை WEP, WPA மற்றும் WPA2 பாதுகாப்புடன் கடவுச்சொல் அங்கீகாரம் அல்லது WiFi பாதுகாக்கப்பட்ட அமைவு (WPS) ஆகியவற்றுடன் ஆதரிக்கின்றன. மேலும், கின்டெல் வடிவமைப்பு 8 (AZW3), கின்டெல் (AZW), TXT, PDF, பாதுகாப்பற்ற MOBI, PRC போன்ற பல்வேறு வடிவங்களை ஆதரிக்கிறது; HTML, DOC, DOCX, JPEG, GIF, PNG மற்றும் BMP ஆகியவற்றை மாற்றுதல். கின்டெல் ஒயாசிஸ் 194 கிராம் எடையுள்ளதாக இருக்கிறது,

top5tablets-depth
top5tablets-depth

லெனோவா மிக்ஸ்:

ரூ.18000 விலையில் கிடைக்கும் இந்த டேப், நவீன கீபோர்டு இணைந்திருப்பதால் இதனை லேப்டாப் போலவும் பயன்படுத்தி கொள்ளலாம். விண்டோஸ் 10 ஓஎஸ் கொண்ட இந்த சாதனம் 2 ஜிபி ரேம், 32 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜை கொண்டது. மேலும் 5எம்பி பின்கேமிரா, 2 எம்பி செல்பி கேமிரா உள்ள இந்த சாதனத்தில் யூஎஸ்பி டைப் சி போர்ட், இரண்டு யூஎஸ்பி 2.0 போர்ட், வைபை மற்றும் புளூடூத் 4.1 வசதி உண்டு.

top5tablets-wide
top5tablets-wide

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பிளக்ஸ்:

குறைந்த விலையில் பல்வேறு நிறுவனங்களில் டேப்ளெட்டுக்கள் மார்க்கெட்டில் கிடைத்து வருகிறது. சாம்சங், லெனோவால், ஐபால் ஆகியவற்றில் தற்போது மைக்ரோமேக்ஸ் டேப்ளட்டுக்களையும் இணைத்து கொள்ளலாம். இந்த மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பிளக்ஸ் டேப் ரூ.12999 என்ற விலையில் கடந்த ஆண்டு அறிமுகம் ஆனது. 8 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே கொண்ட இந்த சாதனம் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜை கொண்டது. குவாட்கோர் மெடியாடெக் எம்டி8382 பிராஸசர் கொண்ட இந்த சாதனத்தில் 5 எம்பி பின்கேமிராவும், 2 எம்பி செல்பி கேமிராவும் உண்டு