2018-இல் மண்ணை கவ்விய முதல் 10 படங்கள்..! இப்படியும் படம் எடுப்பார்களா?

0
217

10.ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்

இந்த படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் மற்றும் காயத்ரி என்று பலர் நடித்திருந்தனர். இதில் முதல் பாதி காமெடியாகவும் ஆனால் இரண்டாம் பாதி காட்டிற்குள் உள்ள மக்களின் வாழ்க்கை சூழ்நிலையை படுமோசமாக அமைத்திருப்பார்கள் அதனால் இந்தப் படம் ஓடவில்லை.

onnp-vijaysethupathy
onnp-vijaysethupathy

9.குலேபகாவலி

பிரபுதேவா மற்றும் ஹன்சிகா மோத்வானி நடித்திருக்கும் இந்தப் படம் மக்களிடையே எந்த ஒரு வரவேற்பையும் பெறவில்லை. பிரபுதேவாவுக்கு வெகுநாள் கழித்து ரிலீஸ் ஆன இந்த படம் அவர் கேரக்டரும் கதையும் எந்த ஒரு பொருத்தமில்லாமல் அமைந்துவிட்டது.

gulubhavaali
gulubhavaali

8.விஸ்வரூபம்-2

இந்த படம் கமல்ஹாசன் இயக்கி, தயாரித்து மற்றும் நடித்த படம் ஆகும். படத்தின் மொத்த பட்ஜெட் 55 கோடி, ஆனால் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ஆனதோ 40 கோடி தான் ஆகையால் போட்ட காசை எடுக்க முடியாமல் திணறியது. இந்த படத்தில் பூஜா குமார் மற்றும் ஆண்ட்ரியா ஹீரோயினாக நடித்து இருப்பார்.

Viswaroopam-II
Viswaroopam-II

7.ஜுங்கா

விஜய் சேதுபதியின் தயாரிப்பில் வெளியான முதல் படம். ஆனால் இந்தப் படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. இந்த படத்தில் மடோனா செபாஸ்டின் மற்றும் சாயிஷா நடித்துள்ளனர்.

junga
junga

6.சொல்லிவிடவா

அர்ஜுன் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் அட்டர் பிளாப் ஆனது. இந்த படத்தில் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் ஹீரோயினாக நடித்து இருப்பார். இப்படத்தில் சதீஷ் மனோபாலா காமெடி நடிகர்களும் நடித்திருப்பார்கள்.

sollividava
sollividava

5.மன்னர் வகையறா

இந்தப் படத்தில் விமல் மற்றும் ஆனந்தி நடித்து இருப்பார்கள் இந்த படமும் எதிர்பார்த்த அளவு ஓடாத காரணத்தினால். நம்ம லிஸ்ட்ல ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஹீரோயின் ஆனந்தி ரொம்ப எதார்த்தமா நடிப்பதுபோல் நடித்து இப்படத்தில் அதற்கு முக்கிய காரணம் ஆகிவிட்டார்.

vimal
vimal

4.காளி

விஜய் ஆண்டனிக்கு எந்த படமும் சுமாராக ஓடிவிடும் ஆனால் 2018 அவருக்கு ஒரு நல்ல வருடமாக இல்லை. அவர் நடித்த காளி மற்றும் திமிரு புடிச்சவன் படங்கள் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. அதில் காளி படத்தில் பிளாஷ்பேக்கில் வரும் விஜய் ஆண்டனியின் கேரக்டர் ஏற்றுக் கொள்ளாத ஒரு கதையாகிவிட்டது. இந்த படத்தில் இசை விஜய் ஆண்டனி . இதில் அஞ்சலி மட்டும் சுனைனா ஹீரோயினாக நடித்துள்ளனர்.

Kaali-vijay-Antony-
Kaali-vijay-Antony-

3.விசிறி

இந்தப் படம் தல மற்றும் தளபதி பேன்ஸ் வைத்து எடுக்கப்பட்டது. இந்த படம் வந்ததும் தெரியல போனதும் தெரியல. இப்படி எல்லாம் படம்எடுக்க முடியுமா என்று யோசிக்க வச்சுட்டாங்க. சமூகவலைத்தளங்களில் டிரெண்டிங்கில் உள்ள தல தளபதி ஃபேன்ஸின்  கதையை ஏன் எடுக்க முடியாது என்று இந்த படம் உருவாக்கப்பட்டது.

visiri
visiri

2.இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு

விமல் எப்படி எல்லாம் இந்த மாதிரி ஒரு கதை செலக்ட் பண்றதுன்னு தெரியல. போன மாதம் தான் ரிலீசானது அதுக்குள்ள இரண்டாவது இடத்தைப் பிடித்துவிட்டது. விமல் மற்றும் ஆஷ்னா ஜோடியாக நடித்திருப்பார்.

eeme-vimal
eeme-vimal

1.பக்கா

இந்த படத்தில் விக்ரம் பிரபு மற்றும் நிக்கி கல்ராணி நடித்திருந்தனர். இந்த படம் செம மொக்கையா இருக்க காரணம் என்னவென்றால் ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் இரட்டை வேடத்தில் நடித்து இருப்பார்கள். 2018 ல் தியேட்டர்களில் அஞ்சு நிமிஷம் கூட உட்கார விடாமல் ரசிகர்களை விரட்டின படத்தில் ‘பக்கா’ மற்றும் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ இடம்பெற்றுள்ளது.

pakka
pakka

விஜய் சேதுபதி 2018 ஆறு படங்கள் வெளியிட்டு உள்ளார் அதில் 2 படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.