பெட்ரோல் – டீசல் விலை ஏற்றத்தை கண்டித்து நாளை ஸ்டிரைக்

0
91

பெட்ரோல் – டீசல் விலை ஏற்றத்தை கண்டித்து நாளை ஸ்டிரைக்

பெட்ரோல் – டீசல் விலை ஏற்றத்தை கண்டித்து நாளை காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெற உள்ளது.பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்திலும் நாளை முழு அடைப்பு நடக்கிறது. காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

petrol
petrol

முழு அடைப்புக்கு திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாமக, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு வெள்ளையன் தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் வணிகர்கள் கடைகளை அடைத்து பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று லாரி தொழிலாளர்களும், தூத்துக்குடி மாவட்ட தீப்பெட்டி தொழிலாளர்களும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.