தக்காளி சாறு ஒரு கிளாஸ் குடித்தால் உடலில் நிகழும் அதிசியம்.!

0
40

Tomato : தக்காளி என்பது நமது சமையல் முறையில் தவிர்க்க முடியாத ஒன்று. பெரும்பாலான தமிழ்நாட்டு சமையல் குறிப்புகள் ‘வெங்காயம், தக்காளி நன்கு வதங்கிய பிறகு’ என்றே ஆரம்பமாகும். இந்த அளவு நம் அன்றாட உணவில் அதிக ஆதிக்கம் செலுத்தும் தக்காளி சாற்றை தினமும் குடித்து வந்தால் என்ன ஆகும் தெரியுமா?

தக்காளி சாற்றில் உள்ள ஊட்டச்சத்துகளான வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை உடலுக்கு புத்துணர்ச்சி தரவல்லது. வைட்டமின் ஏ சத்து இருப்பதால் கண் பார்வை தொடர்பான பிரச்னைகள் வருவதை தடுப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, பல் மற்றும் எலும்பின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.

கொலஸ்ட்ராலை குறைக்கும்:

தினமும் தக்காளி சாறு குடிப்பது நமது ரத்த ஓட்டத்தில் பொதுவாக அதிக அளவில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பை கரைக்கும். தக்காளியில் உள்ள நார்ச்சத்து தேவையற்ற கொழுப்பை நம் உடலில் இருந்து வெளியேற்றி உடல் எடையையும் ஆரோக்கியமான வழியில் குறைக்கும்.

உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும்:

நாம் தினமும் சாப்பிடும் பிற உணவு வகைகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய நச்சுகள் மற்றும் ரசாயனங்கள் இருந்தால் அவற்றை இந்த தக்காளி சாறு

வெளியேற்றிவிடும். மேலும் தக்காளியில் உள்ள சல்பர் மற்றும் குளோரின் அளவு கல்லீரல் மற்றும் சிறுநீரக அமைப்பு வேலை செய்வதை ஊக்குவிக்கும். தக்காளி சிறந்த முறையில் உடலை சுத்திகரிக்கும் ஒரு கருவி ஆகும்.

செரிமானத்திற்கு உதவும்:

தக்காளி பழச்சாற்றை பருகுவதன் மூலம் உடலின் ஈரப்பதம் தக்கவைக்கப்பட்டு ஆரோக்கியமான உணவுகளில் உள்ள சத்துகளை முழுமையாக உறிந்தெடுத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை உடலுக்கு தரவல்லது. செரிமானக் குழாயில் சிக்கியுள்ள உணவு துண்டுகளை சீர் செய்து அஜீரணப் பிரச்னைகளையும் தீர்க்கும்.

இதய நோயிலிருந்து பாதுகாக்கும்:

தக்காளியில் உள்ள பி6 என்கிற ஊட்டச்சத்து இதய நோய்கள் வருவதற்கான அபாயத்தை குறைக்கக்கூடியது. இதயம் தொடர்பான பிரச்னைகள் வருவதற்கு முக்கிய காரணியாக இருக்கும் ஹோமோசைஸ்டீன் இடமிருந்து இந்த சாறு நம்மை பாதுகாக்கும்.

தக்காளி பழச்சாறு தோலின் மேல்புறத்தில் உள்ள பருக்கள், வீக்கங்கள் போன்ற தோல் தொடர்பான நோய்கள் வருவதை தடுக்கும். தோலில் உள்ள பெரிய பெரிய துளைகளை இது மூடுவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசால் தூசி போன்றவை தோலின் வழியாக நம் உடலில் நுழைவதை தவிர்க்கலாம்.

தக்காளி செடிகள் நுரையீரல், மார்பகம், குடல் புற்றுநோய்கள் வருவதை தவிர்க்கும். தினசரி ஒரு கிளாஸ் தக்காளி சாறு எண்ணற்ற மருத்துவ நன்மைகளை தரவல்லது.