நியூசிலாந்தை அடிச்சி தும்சம் செய்த இந்தியா அபார வெற்றி.!

0
60

நியூசிலாந்தை அடிச்சி தும்சம் செய்த இந்தியா அபார வெற்றி.!

நியூசிலாந்துக்கு எதிரான 2 வது ஒரு நாள் போட்டியில் அந்த அணிக்கு, 325 ரன் இலக்கை இந்திய அணி நிர்ணயித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இப்போது, ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. நேப்பியரில் நடந்த முதலாவது போட்டியில் இந்திய அணி, அபார வெற்றி பெற் றது. இரண்டாவது போட்டி மவுன்ட் மாங்கனுயி-ல் இன்று நடக்கிறது.

india
india

இந்திய அணியில் மாற்றமில்லை. கடந்த போட்டியில் விளையாடிய அணியே, இந்தப் போட்டியிலும் களமிறங்கியது. நியூசிலாந்து அணியில், சுழற்பந்துவீச்சாளர் சன்ட்னர், வேகப்பந்துவீச்சாளர் சவுதி நீக்கப்பட்டு, சோதி, கிராண்ஹோம் திரும்பியுள்ளனர்.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மாவும் தவானும் களமிறங்கினர். இவரும் அடித்து ஆடினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 154 ரன் சேர்த்தது. தவான், 66 ரன் எடுத்த நிலையில் போல்ட் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் லாதமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் விராத் கோலி, ரோகித்துடன் இணைந்தார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரண்டாவது போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 324 ரன்கள் அடித்தது.

இந்திய அணியின் சார்பில் ரோகித் சர்மா 87 ரன்களும், ஷிகர் தவான் 66 ரன்களும், விராட் கோலி 43 ரன்களும், மகேந்திர சிங் தோனி 48 ரன்கள் குவிக்க இந்திய அணி இறுதியாக 50 ஓவர்களின் முடிவில் 324 ரன்கள் குவித்தது.

dhoni
dhoni

இதன் பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி துவக்கம் முதலே இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை தாங்க முடியாமல் திணறியது. அந்த அணியின் எந்த ஒரு வீரரும் பெரிதாக ரன் எடுக்கவில்லை. ஒரே ஒரு அரை சதத்துடன் அந்த அணி தனது ஆட்டத்தை 234 ரன்கலுடன் 10 விக்கெட்டை இழந்து முடித்துக்கொண்டது. இந்தியாவின் சார்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அந்த அணியை சூறாவளியாய் சுற்றி எடுத்து விட்டார். அவர் 10 ஓவர்கள் வீசி 45 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்..

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று 2-0 என்ற முன்னணியில் உள்ளது இந்திய அணி.