சியோமியுடன் போட்டியிடும் மொடோரோலாவின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்

0
122

சியோமியுடன் போட்டியிடும் மொடோரோலாவின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் | Motorola one power

மோட்டோரோலா மொபைல் தனது பட்ஜெட் விலையிலான புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அக்டோபர் 5ம் தேதி அறிமுகபடுதுகிறது. இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் சியோமியின் ரெட்மி நோட் 5 ப்ரோ மாடலுக்கு போட்டியாக இந்த ஸ்மார்ட்போன் அறிமுகபடுத்த படுகிறது. இந்தியாவில் தனது விற்பனையை நிலை நிறுத்த மோட்டோரோலா மொபைல்ஸ் இந்த புதிய மாடலை களமிறக்குகிறது. மோட்டோரோலா ஒன் பவர் (Motorola one power) என பெயர் வைக்கபட்டுள்ள இந்த மொபைல் பெயருக்கு ஏற்றார்போல் ஆண்ட்ராய்ட் ஒன் ஓஸ் மூலம் இயங்கும். இந்த ஸ்மார்ட்போன் வருகிற அக்டோபர் 5ம் தேதி பிரத்தியோகமாக பிலிப்கார்டில் ரூ 15,999 க்கு விற்பனைக்கு வருகிறது. லோகோவில் கைரேகை சென்சார் கொண்டதே இதன் சிறப்பு.

motorola one power
motorola one power

மோட்டோரோலா ஒன் அம்சங்கள் | Motorola one power Specification 
இரட்டை நானோ சிம்
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ ஆண்ட்ராய்ட் ஒன் ஒஸ் இயங்கு தளம்
ஆண்ட்ராய்டு 9 பை அப்டேட் வசதி
6.2 அங்குல முழு HD (1080×2246) டிஸ்ப்ளே 18.7:9 விகிதம்
குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 636 SoC
3/4 ஜிபி ரேம் 32/64 ஜிபி ரோம்
16 எம்பி + 5 எம்பி ரியர் கேமரா
ஒரு 12 எம்பி செல்பீ கேமரா
பின்புறம் லோகோவில் கைரேகை சென்சார்
5000mAh கொண்ட பெரிய பேட்டரி