இரண்டு நாட்களில் 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்த “தி லயன் கிங்” ட்ரைலர்.!

0
106

ஹாலிவுட்டில் 1994-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான அனிமேஷன் படம் ‘தி லயன் கிங்’. தற்போது, அந்த படம் அதே பெயரில் லைவ்-ஆக்ஷன் படமாக ரீமேக் செய்யப்படுகிறது. இப்படத்தை ‘தி ஜங்கிள் புக்’ படத்தை இயக்கிய ஜான் ஃபௌரீ இயக்குகிறார்.

the lion king
the lion king

இதில் முக்கிய கதாபாத்திரமான ‘சிம்பா’வுக்கு பிரபல நடிகர் டொனால்ட் க்ளோவர் பின்னணி குரல் கொடுத்துள்ளார். ‘வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ்’ நிறுவனம் இதனை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இன்று (நவம்பர் 23-ஆம் தேதி) படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. படத்தை அடுத்த ஆண்டு (2019) ஜூலை 19-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.