தளபதி 63 பிரமாண்ட அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர்.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

0
162

தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடித்துவரும் திரைப்படம் தளபதி 63, இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார், படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் கதிர், யோகி பாபு, விவேக், இந்துஜா என பலர் இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

சமீபத்தில் ஏ ஆர் ரகுமான் இந்த திரைப்படத்தின் இரண்டு பாடல்களை நான் தான் முதலில் பார்க்கப் போகிறேன் என கூறியிருந்தார், இந்த நிலையில் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாதியின் தங்கை தளபதி 63 திரைப்படத்திலிருந்து அப்டேட் கேட்டு இருந்தார் ஆனால் அர்ச்சனா கல்பாதி மௌனம் காத்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது தளபதி 63 படத்தில் இருந்து புதிய அப்டேட் என்று அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார்கள் படக்குழு தளபதி 63 படத்தின் ஆடியோ வெளியீட்டு உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது இதற்கு முன் மேர்சல் சர்கார் ஆகிய திரைப்படங்களின் ஆடியோ வெளியீட்டை இவர்கள்தான் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

thalapathy 63 music rights
thalapathy 63 music rights