‘தளபதி 63’ படத்திற்காக யோகிபாபு வாங்கிய சம்பளம்

0
96

‘தளபதி 63’ படத்திற்காக யோகிபாபு வாங்கிய சம்பளம்

விஜய் நடித்த ‘சர்கார்’ படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் யோகிபாபு நடித்திருந்தாலும் அந்த காட்சிகள் பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து ‘தளபதி 63; படத்தில் யோகிபாபு, படம் முழுவதும் விஜய்யுடன் டிராவல் செய்யும் கேரக்டரில் நடிக்கவுள்ளாராம். இதனால் யோகிபாபுவின் கணிசமான கால்ஷீட் தேதிகளை அட்லி பெற்றுள்ளார்.

yogibabu
yogibabu

மேலும் நாள் ஒன்றுக்கு ரூ.2 லட்சம் சம்பளம் வாங்கிய யோகிபாபு, ‘கோலமாவு கோகிலா’ படத்தின் வெற்றிக்கு பின்னர் ரூ.3 லட்சமாக சம்பளத்தை உயர்த்தியுள்ளாராம். இந்த நிலையில் விஜய் 63 படத்திற்கு மொத்தமாக 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும், இதற்காக அவர் வாங்கிய சம்பளம் ரூ.50 லட்சம் என்றும் கூறப்படுகிறது

வடிவேலு, சந்தானம் ஆகியோர் ஹீரோ ஆசையால் மார்க்கெட்டை இழந்துவிட்டனர். சூரி, கஞ்சா கருப்பு, சாம்ஸ், ரோபோ சங்கர், மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், சதீஷ் ஆகிய காமெடி நடிகர்களை அசால்ட்டாக பின்னுக்கு தள்ளிவிட்டு யோகிபாபு தற்போது கோலிவுட்டின் காமெடி நடிகர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.