தளபதி 63 – கால்பந்து மைதானத்தில் சாகசம் செய்யும் வீடியோ லீக்.! படக்குழு அதிர்ச்சி

0
119

நடிகர் விஜய் அட்லி இயக்கத்தில் மூன்றாவது முறையாக தளபதி 63 திரைப்படத்தில் இணைந்துள்ளார், இந்த திரைப்படத்தை வருகிற தீபாவளிக்கு உலகம் முழுவதும் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள், மேலும் படத்தில் நயன்தாரா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், இந்துஜா மோனிகா, என பலர் நடித்து வருகிறார்கள்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பத்தில் இருந்து சென்னை அதன் சுற்றுப்புறங்களில் தான் நடைபெற்று வருகிறது, மேலும் ஈவிபி பிலிம் சிட்டியில் மிகப் பெரிய அரங்கம் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் விஜய்யின் பிறந்த நாளன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இப்படத்தின் படப்பிடிப்பின் ஆரம்பத்திலிருந்தே வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் கசிந்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில் இப்படத்திற்காக EVP பிலிம் சிட்டியில் போடப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டில் பயிற்சியாளர் போல் இருக்கும் ஒருவர் கால்பந்தில் செய்யும் சாகசங்களை படத்தில் நடிக்கும் ஜீனியர் ஆர்ட்டிஸ்ட்கள் கசியவிட்டுள்ளனர்.