தளபதி 63 படத்தின் கதை லீக் ஆனது.! கோச்சரா விஜய் என்ன சாதிப்பார்.!

0
133

Thalapathy 63 Story: தளபதி 63 படத்தின் கதை லீக் ஆனது.!

Thalapathy 63 Story : தளபதி 63 படத்திற்கு எச். ராஜா நிச்சயம் ப்ரோமோஷன் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான காரணம் தளபதி 63 படத்தின் கதை தான்.

thalapathy 63
thalapathy 63

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். கால் பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருமாகி வரும் இந்த படத்தில் விஜய் கோச்சராக நடித்து வருகிறார்.

கிரிக்கெட்டுடன் ஒப்பிடும் பொது கால் பந்து விளையாட்டில் இந்தியா பல மடங்கு பின் தங்கியுள்ளது. ஏன் இந்தியா இந்த அளவு பின் தங்கியுள்ளது என்பதை கொண்டு தான் இப்படம் உருவாகியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் கால்பந்து வீரர்களை தேர்வு செய்யும் கமிட்டி வீரர்களை தேர்வு செய்து வைக்க எதிர்பாராத விதமாக அவர்கள் ஒவ்வொருவராக கொள்ளப்படுகிறார்கள். அந்த கொலை பழி விஜய் மீது விழுகிறது.

இதனால் தளபதி விஜய் இந்த கொலைகளுக்கெல்லாம் யார் காரணம்? உண்மையில் என்ன நடக்கிறது என்பதை கண்டு பிடிப்பாராம். இது தான் இப்படத்தின் கதை எனவும் தெரிய வந்துள்ளது.அதே சமயம் இப்படத்திற்கு மைக்கேல் என தலைப்பு வைக்கலாம் எனவும் படக்குழு ஆலோசித்து வருகிறதாம்.

அப்படி மைக்கேல் என பெயர் வைத்தால் நிச்சயம் பிஜேபியின் எச்.ராஜா அண்ட் கோ இப்படத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் ப்ரீ ப்ரோமோஷன் செய்வார்கள் எனவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.