விஜய் 63 படத்தில் விவேக்குடன் இணைந்த மற்றொரு காமெடி நடிகர்! யார் என்று தெரிந்தால் அசந்துவிடுவீர்கள்
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியாகிய திரைப்படம் சர்கார் இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக தளபதி-63 என பெயர் வைத்துள்ளனர்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ள இந்த படத்தின் ஹீரோயின் யார் என்பது இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் இந்த படத்தில் நான் நடிக்கிறேன் என பிரபல காமெடி நடிகர் விவேக் சமீபத்திய விழாவில் கூறிவிட்டார்.
இந்நிலையில் இந்த படத்தில் விவேக்குடன் சேர்ந்து யோகி பாபுவும் நடிக்கவுள்ளாராம். இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறதாம். மேலும் சர்கார் படத்திலும் யோகி பாபு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.