அதட்டிய விஜய் அடிபணிந்த அட்லி.! தளபதி 63 சர்ச்சை முழு விவரம் இதோ

0
223

thalapathy 63 : தமிழ் சினிமாவில் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழும் தளபதி விஜய் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து அட்லி கூட்டணியில் தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக ‘தளபதி 63’ படத்திற்காக இணைந்துள்ளனர்.

thalapathy 63 atlee

விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் கதிர், யோகிபாபு டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கவுள்ளார்.

விளையாட்டை மையப்படுத்தி உருவாகிவரும் இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு காபந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்றும், மேலும், விஜய் தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருப்பார் தகவல் வெளிவந்தது. இந்த மேட்ச் தமிழ்நாடு மகளிர் அணி மற்றும் மணிப்பூர் மகளிர் அணிக்கு இடையில் நடக்கும் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

இதற்காக சென்னையில் உள்ள இவிபி ஸ்டுடியோவில் மிகப்பெரிய கால்பந்தாட்ட மைதானம் ஒன்றை ‘செட்’ போட்டுள்ளனர். அங்கு தொடர்ந்து 50 நாட்கள் படப்பிடிப்புகள் நடைபெற இருக்கிறது. மேலும் பெரும்பாலான படப்பிடிப்புகள் சென்னையில் தான் நடைபெற இருக்கிறது.

காரணம் நம்ம ஊர் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே வெளிமாநிலத்தில் குறிப்பாக ஐதராபாத்தில் படப்பிடிப்பு வைக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார் விஜய். எனவே சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் தற்போது சொல்லவரும் தகவலென்னவென்றால், தளபதி 63 படத்திற்கு சொன்ன பட்ஜெட்டை விட அதிகம் செலவாகிவிட்டதாக தயாரிப்பாளர் தரப்பு இயக்குனர் அட்லீ மீது குற்றம் சாட்ட

இந்நிலையில் இவ்விவகாரத்தில் அதிரடியாக நடிகர் விஜய் தலையிட்டுள்ளாராம்.

விஜய்யிடம் இதுகுறித்து விளக்கமளித்த அட்லி, கணக்கு எல்லாம் சரியாக உள்ளதுண்ணா..வேண்டுமானால் ஆடிட்டரை வைத்து கூட பார்க்க சொல்லுங்கள் என பணிந்துவிட்டாராம். விஜய்யும் அட்லியின் வார்த்தையை ஒப்புகொண்டுவிட்டதாக சொல்லப்படுகிறது.