தல-59 படபிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படம்.!

0
121

தல-59 படபிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படம்.!

தல அஜித் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துவிட்டார் இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு மிக பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது இதனை தொடர்ந்து அஜித் அடுத்த  படத்தில் நடிக்க ரெடி ஆகி விட்டார் இந்த திரைப்படம் பாலிவுட்டில் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக் என கூறியுள்ளார்கள்.

thala 59
thala 59

பிங்க் படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் டாப்சி நடித்திருப்பார்கள், மேலும் பிங்க் படத்தின் ரீமேக்கை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்,  தீரன் அதிகாரம் ஒன்று இயக்குனர் வினோத் இந்த படத்தை இயக்க இருக்கிறார், யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை  நிரவ்ஷோ ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்க இருப்பதாகவும் அதற்காக அங்கு பெரிய செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது மேலும் ஒளிப்பதிவாளர் நிரவ்ஷோவிடம் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ரசிகர் ஒருவர் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார் இதோ அந்த புகைப்படம்.