இப்போதைய சினிமா படங்கள் நாட்டை சீரழிக்கின்றன! பிரபல இயக்குனர் வேதனை

0
62

இப்போதைய சினிமா படங்கள் நாட்டை சீரழிக்கின்றன! பிரபல இயக்குனர் வேதனை

தமிழ் சினிமாவுக்கு உலகளவில் நல்ல வரவேற்பு உண்டு. வரலாறு கொண்ட இந்த சினிமா தற்போது நவீன தொழில்நுட்ப ரீதியாக மிகவும் முன்னேறிவிட்டது என்றே சொல்லலாம்.

Tamil-Movies-list-2018
Tamil-Movies-list-2018

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய் என அடுத்தடுத்து வளர்ந்து நிற்கிறது. இதில் 80 களில் நல்ல கதைகளை கொண்டு படத்தை இயக்கியவர் விசு. பல படங்களில் அவரே நடித்திருந்தார்.

அவரின் சில படங்கள் இன்றும் டிவியில் ஒளிப்பரப்படுகின்றன. அண்மையில் அவர் ஈரோடு சத்தியமங்கலத்தில் தனியார் கல்லூரி விழாவின் பாரதி உலா என்ற தலைப்பில் கருத்தரங்கத்தில் பேசினார்.

பின் செய்தியாளர்களுக்கு பேசியவர் தற்போது சினிமா நிறைய முன்னேறியிருக்கிறது. ஆனால் கதையில் மிகவும் பின் தங்கியிருக்கிறது. இந்த படங்களால் சமுதாயத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.