mahat-raghavendra-tamil360newz

சமூக வலைதளத்தில் வைரலாகும் பிக்பாஸ் மகத் வெளியிட்ட வீடியோ.!!

Actor Magath Ragavendra video: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2வில் அறிமுகமாகி பிரபலமானவர் மஹத் ராகவேந்திரா. இவர்  இதற்கு முன் தமிழ் சினிமாவில் வல்லவன், மங்காத்தா, பிரியாணி, ஜில்லா, வடகறி,  அன்பானவன் அசராதவன் அடங்காதவன்,  வந்தா ராஜாவாகத்தான் வருவேன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

மகத் தற்போது இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் நடிக்கும் கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா என்ற படத்தில் இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா தத்தா நடித்து வருகிறார். மேலும் இவன் தான் உத்தமன் என்ற திரைப்படத்தில் யாஷிகா ஆனந்த் ஜோடியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கொரோனா வைரஸின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் படங்கள் எதுவும் திரையிடபடாமலும் மற்றும் எடுக்க படாமலும் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

தயாரிப்பாளர்களின் நஷ்டத்தை குறைப்பதற்காக திரைப்பட நடிகை, நடிகர்கள்  தானாகவே முன்வந்து அவர்களின் சம்பளத்தை குறைத்துக் கொள்வதாக அறிவிக்கின்றனர். அந்த வகையில் மகத் அவர்களும்  இவர்கள் மூவரும் இவ்ளோ சம்பளம் தான் கொடுக்க முடியும் என அறிவித்தால் நான் 20% அல்ல 70% ஆக கூட குறைத்துக் கொள்கிறேன் என்று கூறி வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையதலத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.