ஸ்விக்கி – ஜோமாட்டோ ஊழியர்கள் மீது அதிரடி வழக்கு.! அதுவும் 616 பேர் மீது

0
41

swiggy : ஸ்விக்கி – ஜோமாட்டோ.உபேர் ஈட்ஸ் ஊழியர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இது தொடர்பாக 616 பேர் மீது போக்குவரத்து விதிகளை மீறி இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

swiggy
swiggy

உணவை விரைவாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக போக்குவரத்து விதிகளை மீறி சென்றுள்ளதாக புகார் எழுந்து உள்ளது.

மேலும் ஹெல்மெட் அணியாமல் இருப்பதும் சிக்னலில் நிற்காமல் அதிவேகமாக செல்வதும் என இது போன்ற காரணங்களால் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதெற்கெல்லாம் என்ன காரணம் என்று அலசினால், 24 மணி நேரத்தில் எந்நேரமாக இருந்தாலும், உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்தாலே போதும் அடுத்த அரை மணி நேரத்தில் நம் வீட்டு வாசலில் டெலிவரி செய்வதே…

எப்படி இவ்வளவு விரைவாக வர முடியும்..? அப்படி விரைவாக வர வேண்டும் என்றால் எவ்வளவு வேகத்தில் வருவார்கள் ? என்பதன் விளைவு தான் தற்போது இத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.