பாலியல் சில்மிஷம் செய்த ஊழியர்! 200 ரூபாய் கூப்பன் கொடுத்து பஞ்சாயத்து பண்ணிய ஸ்விக்கி.!

0
102

பாலியல் சில்மிஷம் செய்த ஊழியர்! 200 ரூபாய் கூப்பன் கொடுத்து பஞ்சாயத்து பண்ணிய ஸ்விக்கி.!

பாலியல் தொல்லை தந்த ஸ்விக்கி ஊழியருக்கு எதிராக புகார் கொடுத்த பெண்ணுக்கு அந்நிறுவனம் கூப்பன் கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 28ஆம் தேதி, ஆன்லைன் உணவு சேவை மையமான ஸ்விக்கி மூலம் தனக்கு தேவையான உணவை ஆர்டர் செய்துள்ளார்.

இதையடுத்து அந்த இளம்பெண் வீட்டுக்கு ஸ்விக்கி ஊழியர் ஒருவர் உணவை டெலிவரி செய்ய வந்துள்ளார்.அப்போது அவர் தனியாக இருந்த அந்த இளம்பெண்ணுக்கு பாலியல்ரீதியாக தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். அதை கண்டு சுதாரித்துக் கொண்ட இளம்பெண் உடனே அங்கிருந்து சென்றுள்ளார்.

கூப்பன் கொடுத்த ஸ்விக்கி நிறுவனம்

இதனையடுத்து ஊழியரின் செயலை வாடிக்கையாளர்கள் சேவை மையத்திற்குத் தெரிவித்த அந்த இளம்பெண் உடனடியாக அந்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். ஆனால் அதற்கான உரிய நடவடிக்கையை எடுக்காத ஸ்விக்கி நிறுவனம், சாரி என்று கூறியதோடு, அப்பெண்ணுக்கு 200 ரூபாய் மதிப்புள்ள கூப்பனை இழப்பீடாக அளித்துள்ளது. இதை கண்ட அப்பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.

நடவடிக்கை எடுக்குமா?

இதையடுத்து தனக்கு நேர்ந்த கொடுமையை அப்பெண் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டதையடுத்து ஸ்விக்கி நிறுவனம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்காக, நுகர்வோர்களே முதலாளிகள் என்று ஏகவசனம் பேசும் இது போன்ற பெரும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் புகார்களை மேம்போக்காக பார்ப்பதோடு, இது போன்று அலட்சியமாகவும் இருப்பது அவர்களின் நிறுவனம் மீதான நம்பிக்கையை குலைக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.