சூர்யாவின் என்.ஜி.கே படத்தின் டைட்டில் சாங் மற்றும் டீசர் தேதி அறிவிப்பு..! உற்சாகத்தில் ரசிகர்கள்..

0
127

சூர்யாவின் என்.ஜி.கே படத்தின் டைட்டில் சாங் மற்றும் டீசர் தேதி அறிவிப்பு..! உற்சாகத்தில் ரசிகர்கள்..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு, பிதாமகன் போன்ற படங்கள் நல்ல வெற்றிப்படங்களாக அமைந்தன. இவருக்கு பலதரப்பட்ட ரசிகர்களும் உள்ளனர். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவரது குடும்பத்தினர் சேர்ந்து நிதி உதவி அளித்தனர். இவரது ரசிகர்கள் சேர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பரிமாறி உதவி செய்தனர். இது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரிடமும் நன்மதிப்பைப் பெற்றுக் கொடுத்தது.

ngk
ngk

சூர்யாவின் NGK ஷூட்டிங் படுவேகமாக நடந்து கொண்டு வருகிறது விரைவில் NGK முடிந்துவிடும் என கூறுகிறார்கள், இந்த நிலையில் இப்படத்தின் டீசர் வரும் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று வெளிவரும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இது சூர்யாவின் ரசிகர்களை மிகவும் சந்தோஷப்படுத்திவருகிறது.

செல்வராகவன் இயக்கும் NGK படத்திற்கு ‘யுவன் சங்கர் ராஜா’ இசையமைக்கிறார், இது அவரின் படைப்புகளில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும் என்று குறிப்பிடுகின்றனர். சூர்யாவின் ஓப்பனிங் டைட்டில் சாங் ‘திம்ராலயா திம்ராலயா’ என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சூர்யாவின் ரசிகர்கள் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளிவந்தது சமூக வலை தளங்களை தெறிக்க விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அடுத்தடுத்து அப்டேட்டுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.