கேரளாவில் மாஸ் காட்டும் சூர்யா.! செம்ம கெத்து

0
39

suriya : கேரளாவில் மாஸ் காட்டும் சூர்யா.! செம்ம கெத்து

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் படம் என்ஜிகே. இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

suriya
suriya

இந்த படத்தின் டீசர் காதலர் தினத்தை முன்னிட்டு நாளை வெளியாகவுள்ளது. இந்நிலையில் பிரபல இணையதளத்திற்கு  பேட்டியளித்திருந்த கார்த்தி, என்ஜிகே டீசரை பார்த்துவிட்டதாகவும், டீசர் சிறப்பாக வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த டீசருக்கு சென்சார் U சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும், டீசர் 1 நிமிடம் 2 வினாடிகள் ஓடும் எனவும் படக்குழு அறிவித்திருந்தது. நடிகர் சூர்யா, தமிழகத்தை போலவே கேரளத்திலும் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

இதன் காரணமாக என்ஜிகே படத்தின் டீசர் கேரளத்திலும் வெளியாகவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு கடற்கரை பகுதியில் சூர்யா ரசிகர்கள் சார்பில் இந்த படத்தின் டீசர் ஒளிபரப்பாகவிருப்பதாகவும், அதற்கான முறையான அனுமதி பெறப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.