பிரபல மாஸ் நடிகரை இயக்கும் விஸ்வாசம் இயக்குனர் சிவா.! அதிகாரபூர்வ அறிவிப்பு

0
99

Suriya 39 Announcement : சூர்யா 39 படத்தின் இயக்குனர் யார்? என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை ஸ்டூடியோ கிறீன் நிறுவனம் சற்றுமுன் அறிவித்துள்ளது.தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து மாபெரும் ரசிகர்கள் பட்டாளத்துடன் வலம் வருபவர் சூர்யா.

இவரது நடிப்பில் NGK , காப்பான் ஆகிய படங்கள் ரிலீசுக்கு வரிசை கட்டி நிற்கின்றன. மேலும் இவர் தற்போது இறுதி சுற்று இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் சூரரைப்போற்று என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை சூர்யா39 படத்தின் அறிவிப்பு மாலை 5 மணிக்கு வெளியாகும் என ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அறிவித்து இருந்தது.அதன்படி தற்போது சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவாதான் இயக்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு டி. இம்மான் இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.