சூரரைப் போற்று திரைப்படத்தில் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் கனெக்ஷன்.! ரசிகர்கள் கொண்டாட்டம்

0
89

நடிகர் சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் நடித்த NGK திரைப்படம் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கின்றன, மேலும் சூர்யா கேவி ஆனந்த் இயக்கத்தில் காப்பான் திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கின்றன.

இந்த நிலையில் இறுதி சுற்று இயக்குனர் சுதா கோங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படத்தில் அபர்ணா பாலமுரளி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார், மேலும் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

ஹாலிவுட் திரைப்படமான ‘ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’ படத்தின் அனைத்து பாகங்களும் மெகா ஹிட் பெற்றது. இதற்கு இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் மிக முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், ‘ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’ படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிந்த கிரேக் பவல் என்பவர் நடிகர் சூர்யா நடித்து வரும் ‘சூரரை போற்று’ படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக இணைந்துள்ளார்.

இதனையடுத்து இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் பயங்கரமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.