சூப்பர் டீலக்ஸ் ட்ரைலரை மரணமாய் வச்சி செய்த மீம் கிரியேட்டர்கள்.! வைரலாகும் வீடியோ

0
70

சூப்பர் டீலக்ஸ் ட்ரைலரை மரணமாய் வச்சி செய்த மீம் கிரியேட்டர்கள்.! வைரலாகும் வீடியோ

‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்திற்கு பிறகு ஒரு நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்ட இயக்குநர் தியாகராஜா குமாரராஜா விஜய் சேதுபதியை வைத்து இயக்கி இருக்கும் திரைப்படம் ‘சூப்பர் டீலக்ஸ்’.

இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் நடித்து இருக்கிறார் என்பதாலே இப்படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இந்நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி இணைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்தின் ட்ரைலர் போலவே இந்த ட்ரைலரும் ஒரு கதைசொல்லி அதற்கேற்றவாறு காட்சிகளும் அமைத்திருக்கிறார் இயக்குநர் தியாகராஜா குமாரராஜா.இந்த படத்தில் காட்டில் ஒருவனை புலி துரத்த அவன் மயிரிழையில் தப்பிக்கிறானா இல்லை என்ன நடக்கிறது என்கிற கதையின் பரபரப்பும், ஸ்வாரஸ்யமும் காட்சிகளின் ஊடே நம்மை கவர்கிறது.

இந்த ட்ரைலர் நேற்று சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து இந்த ட்ரைலரை வடிவேல் வெர்ஷன் செய்து வெளியிட்டிருக்கிறார்கள் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்.