கிட்டத்தட்ட 19 வருடம் கழித்து ரஜினியின் தர்பார் திரைப் படத்தில் இணைந்த பிரபல நடிகர்.!

0
95

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேட்டை படத்தை தொடர்ந்து தற்போது நடித்துவரும் திரைப்படம் தர்பார் இந்த திரைப்படத்தை முருகதாஸ் தான் இயக்கி வருகிறார். படத்தை பிரமாண்டமாக லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

பேட்ட படத்தினை தொடர்ந்து இந்த படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார். இதில் நயன்தாரா, நிவேதா தாமஸ் மற்றும் யோகி பாபு என பலர் நடிக்கின்றனர்.மேலும் படத்தில் ரஜினி ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையதளத்தில் அடிக்கடி லீக் ஆகியுள்ளது.

இந்நிலையில் பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்த ஸ்ரீமன் இணைந்துள்ளார். இது குறித்து கூறிய அவர் கிட்டத்தட்ட 19 வருடங்கள் கழித்து முருகதாஸ் படத்தில் நடிப்பதாக கூறி நெகிழ்ந்தார்.