சுவையான ஸ்பைசி மட்டன் சாப்ஸ் செய்வது எப்படி.!

0
197

தேவையான பொருட்கள் :

மட்டன் – அரை கிலோ, கறிவேப்பிலை – சிறிது, பச்சை மிளகாய் – இரண்டு,  கரம் மசாலா தூள் – கால் தேக்கரண்டி, தனியா தூள் – ஒரு தேக்கரண்டி,  மிளகு தூள் – ஒரு தேக்கரண்டி, இஞ்சி பூண்டு – ஒரு தேக்கரண்டி, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி,

செய்முறை :

மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

கழுவிய மட்டனை குக்கரில் போட்டு அதில் உப்பு, தனியாதூள், இஞ்சி பூண்டு விழுது, மிளகு தூள், பச்சை மிளகாய், 1 கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வேக வைக்கவும்.

குக்கரை விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து வைக்கவும்.

ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் அதில் கரம் மசாலா தூள் சேர்த்து அதில் வேக வைத்த மட்டனை தண்ணீருடன் சேர்த்து தண்ணீர் வற்றி நன்கு சிவக்க வறுத்தெடுத்து பரிமாற வேண்டும்.

spicy-mutton-chops
spicy-mutton-chops

சுவையான ஸ்பைசி மட்டன் சாப்ஸ் ரெடி