நீண்ட நாட்களுக்கு பிறகு சமூக ஆர்வலர் முகிலன் பற்றி துப்பு கிடைத்துள்ளது.! உச்சநீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல்.!

0
55

முகிலன் என்பவர் சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளுக்கு அவ்வப்போது குரல் கொடுத்து வந்தவர், இவர் கடைசியாக ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது பற்றி சில ஆதாரங்களை கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி மீடியாக்களுக்கு சில ஆதாரங்களை வெளியிட்டு விட்டு மதுரை செல்வதாக கூறிவிட்டு எழும்பூர் ரயில்வே நிலையத்திற்கு சென்றார்.

ஆனால் அவர் மதுரையை சென்றடையவில்லை அதற்குள் அவரை கடத்தி விட்டார்கள் எனக் கூறப்பட்டது,பல நாட்கள் ஆகியும் இன்னும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை சிபிசிஐடி விசாரணை நடத்தி வருவதாக கூறியுள்ளார்கள், இந்த நிலையில் ஹென்றி டிபேன் என்பவர் ஆட்கொணர்வு மனு ஒன்றினை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு மார்ச் 4 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது, அப்போது சிபிசிஐடி போலீஸ் 148 பேரிடம் விசாரணை நடத்தியதாகவும் இந்த வழக்கில் முன்னேற்றம் கிடைத்துள்ளதாகவும் கூறினார்கள்,மேலும் மீண்டும் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது அப்போது சிபிசிஐடி முகிலன் பற்றி துப்பு கிடைத்துள்ளதாகவும், இதை வெளியே கூறினால் விசாரணை பாதிக்கப்படும் என்று கூறியுள்ளார் அதனால் வழக்கை 3 வாரங்கள் ஒத்திவைத்துள்ளார்.