இவுங்க தான் வேணும் அடம் பிடித்த சிவகார்த்திகேயன்.! ஓகே சொன்ன இயக்குனர்

0
95

Pandiraj film – தமிழ் சினிமாவில குறுகிய காலத்திலேயே முன்னணி நாயகனா உருவெடுத்தவரு சிவகார்த்திகேயன். வருஷத்துக்கு ஒரு படம்னு நிதானமா நடிச்சிட்டு வந்த சிவகார்த்திகேயன், இப்போ வழக்கத்துக்கு மாறா ஒரே நேரத்தில அடுத்தடுத்து பல படங்கள்ல நடிச்சிட்டு வர்றாரு.

அண்மையில ஹீரோ படத்த முடிச்சு கொடுத்த சிவகார்த்திகேயன், இப்போ பாண்டிராஜ் படத்தோட படப்பிடிப்பில பங்கேற்று இருக்காரு.

தமிழ்ல துப்பறிவாளன் படம் மூலமா அறிமுகமான அனு இமானுவேல் இந்த படத்தில சிவகார்த்திகேயன் ஜோடியா நடிக்கிறாங்க. மேலும் கனா படத்தில சேர்ந்து நடிச்ச சிவகார்த்திகேயன் – ஐஷ்வர்யா ராஜேஷ் கூட்டணி இந்த படத்தில அண்ணன் – தங்கையா நடிக்க இருக்காங்க.

இவங்க போக யோகி பாபு, சூரின்னு ரெண்டு காமெடி நட்சத்திரங்கள் இந்த படத்தில இணைஞ்சிருக்காங்க. மேலும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

ரவிக்குமார் இயக்கிய சிவகார்த்திகேயனின் முந்தைய படத்துக்கும் இவர்தான் ஒளிப்பதிவாளர். அதனால் சிவகார்த்திகேயனின் சிபாரிசின் பேரிலேயே இவர் மீண்டும் இப்படத்தில் இணைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.