விஜய் படத்தின் பாடல் வரியை டைட்டிலாக சூட்டிய சிவகார்த்திகேயன்?

0
145

விஜய் படத்தின் பாடல் வரியை டைட்டிலாக சூட்டிய சிவகார்த்திகேயன்? | sivakarthikeyan next movie title

கோலிவுட்டில் ‘சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் எம்.ராஜேஷ். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. இதனையடுத்து ராஜேஷ் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இப்படத்தை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.

sivakarthikeyan-new-photo
sivakarthikeyan-new-photo

இது சிவகார்த்திகேயனின் கேரியரில் 13-வது படமாம். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா டூயட் பாடி ஆடி வருகிறார். மேலும், முக்கிய வேடங்களில் சதீஷ், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கும் இதற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்துக்கு ‘ஜித்து ஜில்லாடி’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது. இது விஜய்யின் ‘தெறி’ படத்தில் இடம்பெற்ற பாடல் வரி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தலைப்பு தொடர்பாக இயக்குநர் எம்.ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் “இன்னும் SK13 படத்தின் டைட்டில் முடிவு செய்யப்படவில்லை. வெகு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்” என்று விளக்கம் அளித்துள்ளார்.