சிவகார்த்திகேயன் தம்பி ஹீரோவாகிறார் இயக்குனர் யார் தெரியுமா.?

0
115

சிவகார்த்திகேயன் தம்பி ஹீரோவாகிறார் இயக்குனர் யார் தெரியுமா.?

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த கிருஸ்த்துமஸ் பண்டிகையில் வெளியானது “கனா” திரைப்படம். இப்படத்தை அருண் காமராஜ் இயக்கினார். பெண்கள் கிரிக்கெட் போட்டியை மய்யப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

sivakarthikeyan
sivakarthikeyan

இந்தப் படத்திற்கு வெற்றிவிழாவும் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. கிடைத்த லாபத்தில் விவசாயிகளுக்கு ஒரு பங்கை கொடுப்பதாகவும் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் அறிவித்திருந்தார்.

இந்தப் படத்தில் ஐஷ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் ஐஷ்வர்யாவை காதலிக்கும் கிராமத்து பையனாக புதுமுக நடிகர் தர்ஷன் நடித்திருந்தார். தற்போது ரோல் டைம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் படத்தில் நாயகனாக நடிக்க தர்ஷன் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். பெயரிடப்படாத இந்த படத்தை ஹரிஷ் ராம் இயக்குகிறார்.

இவர் எதிர் நீச்சல், காக்கி சட்டை, கொடி போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இந்த படத்தில் நடிப்பதற்கு நடிகர் நடிகைகள் தேர்வு செய்யும் வேலை வெகுவாக நடந்து வருகிறது.