உடல் எடையை அதிரடியாகக் குறைத்து கரடு முரடாக மாறிய சிம்பு.! மன்மதன் இஸ் பேக்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு இவர் பல திரைப்படங்களில் நடித்து வெற்றி கண்டவர் அதேபோல் குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இன்றுவரை சினிமாவில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சிம்புவிற்கு சில காலங்களுக்கு முன்பு படங்கள் எதுவும் வெளியாகவில்லை அதற்கு காரணம் சரியாக அவரின் திரைப்படம் ஓட வில்லை. இந்த நிலையில் சிம்பு என்னதான் திரைப் படங்கள் வெளியாகாமல் இருந்தாலும் அவரின் ரசிகர்கள் சிம்புவை மறக்க மாட்டார்கள்.

ரசிகர்கள் சிம்பு தோல்வி திரைப்படங்களை கொடுத்தாலும் சிம்பு பக்கம் தான் இருக்கிறார்கள் அதனால் தான் சிம்பு இன்னும் சினிமாவில் நிலைத்து நிற்க முடிகிறது.  சிம்பு என்றாலே வம்பு என்ற காலம் போய் தற்போது தான் உண்டு தன் வேலை உண்டு என படங்களில் நடிப்பதில் மிகவும் பிசியாக இருக்கிறார்.

கிட்டத்தட்ட மூன்று திரைப்படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார் சிம்பு.  இந்த நிலையில் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு வெள்ளை புகைப்படம் ஒன்றை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார் அந்த புகைப்படத்தில் கண்ணாடி அணிந்து கண்ணாடி முன்பு நின்று கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு கேப்டனாக ‘நாட் எவரிதிங் இஸ் பிளாக் அண்ட் ஒயிட்’ என கேப்டனாக பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது அதுமட்டுமில்லாமல் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மன்மதன் இஸ் பேக் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

சிம்பு தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் நதியினிலே நீராடும் சூரியன் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்  அதுமட்டுமல்லாமல் பத்துதல என்ற திரைப்படத்திலும் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

simbu black
simbu black

Leave a Comment