உங்களின் பேரன்புக்கு நன்றி வாட்சன் வெளியிட்ட வீடியோ.!

0
61

shane watson : நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக விளையாடிய ஆஸ்தியேலிய வீரர் ஷானே வாட்சன் உருக்கமான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பார் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ஷேனே வாட்சன் தமிழகத்தின் செல்லப்பிள்ளை ஆகிவிட்டார். இறுதிப்போட்டியில் சென்னை அணிக்காக விளையாடிய வாட்சன் 80 ரன்கள் எடுத்து தனி ஒருவனாக அணியை வெற்றி பெற முயற்சி செய்தார். ரன் எடுக்க வாட்சன் ஓடியபோது டைவ் அடித்த போது அவரத் காலில் காயம் ஏற்பட்டது.

ஆனால், அதை அவர் யாரிடமும் தெரிவிக்கவில்லை. அவர் அவுட் ஆனபின்னரே இந்த விவகாரம் மற்றவர்களுக்கு தெரியவந்தது. அவரது காலில் 6 தையல்கள் போடப்பட்டது. இதையடுத்து, ரத்த காயங்களுடன் அவர் விளையாடிய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து வாட்சனை பாராட்டினர். ஏறக்குறைய கிரிக்கெட் ரசிகர்களின் செல்லப்பிள்ளையாகவே அவர் மாறிவிட்டார்.

இந்நிலையில், தனது சொந்த ஊரான ஆஸ்திரிலேயா திரும்பிய வாட்சன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ‘ கடந்த சில நாட்களாக நீங்கள் காட்டி வரும் அன்பு மற்றும் ஆதரவிற்கு நன்றி. மும்பை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றியின் அருகே சென்று வெற்றி பெற முடியாமல் போனாலும், அது ஒரு சிறந்த ஆட்டமாக இருந்தது. அடுத்த வருடம் இன்னும் சிறப்பாக விளையாடுவேன். விசில் போடு” என தெரிவித்துள்ளார்.