சென்னை அணிக்காக ரத்தம் வழிய வழிய விளையாடிய வாட்சன்.! வீடியோ உள்ளே

0
101

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்காக கடைசி வரை போராடிய வாட்சன் 80 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறி, போட்டியை முடித்து கொடுக்க முடியாமல் பெளலியன் திரும்பினார்.

shane_watson
shane_watson

அவர் இல்லாததால், போட்டி அப்படியே மும்பை அணி பக்கம் மாறியது.  இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது வாட்சன் இரத்தம் வழிந்த நிலையில் சென்னை அணிக்காக விளையாடியுள்ளார்.

இது தொடர்பான புகைப்படம் குறித்து ஹர்பஜன் விளக்கம் அளிக்கையில், நேற்றைய போட்டியின் போது வாட்சன் ரன் ஓடும் போது டைவ் அடித்ததில் அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதை யாரிடமும் தெரிவிக்காமல் கடைசி வரை விளையாடியுள்ளார். போட்டிக்குப் பின்னர் காலில் ஏற்பட்ட காயத்திற்கு 6 தையல்கள் போடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதைக் கண்ட சென்னை ரசிகர்கள் உடனடியாக அவரின் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி வருவதுடன், விரைவில் வாட்சனுக்கு அந்த காயம் ஆற வேண்டும் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

shane_watson
shane_watson
shane_watson
shane_watson
shane_watson
shane_watson