செப்டம்பர் மாத ராசிபலன்… அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு தெரியுமா?

0
135

செப்டம்பர் மாத ராசிபலன்… அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு தெரியுமா?

மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
கிரகநிலை:
ராசியில் சந்திரன் – சுக ஸ்தானத்தில் ராஹூ – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் – களத்திர ஸ்தானத்தில் குரு, சுக்ரன் – பாக்கிய ஸ்தானத்தில் சனி – தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

rasipalan
rasipalan

கிரகமாற்றம்:
15.09.2018 அன்று பகல் 2.06 மணிக்கு புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17.09.2018 அன்று மாலை 05.16 மணிக்கு சூர்ய பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் ரண ருண ரோகாதிபதியை ஆட்சி நிலையில் அமையப்பெறும் மேஷ ராசி அன்பர்களே, உடல் நலம் சீராகும். நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்து வந்த உடல் பாதிப்புகள் அகலும். மனதில் உற்சாகம் பிறக்கும். எதையும் சாதிக்கும் துணிவு உண்டாகும். புதிய முயற்சிகள் செய்ய முற்படுவீர்கள். பல லாபம் தரக்கூடிய திட்டங்களை யோசித்து செயல்படுத்துவீர்கள்.

குடும்பத்தில் பெரியோர்களின் நல்லாசியும், ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். சொந்தங்கள் வீட்டிற்கு வாய்ப்புண்டு. அவர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். நீண்ட நாட்களாக வாங்க இருந்த பொருட்களை வாங்க திட்டமிடுவீர்கள். எல்லோரிடமும் விட்டுக் கொடுத்து பேசி அனைவரையும் தங்கள் பால் வைத்திருக்க முயற்சி செய்வீர்கள். சொத்து விவகாரங்களில் மற்றவர்களின் பேச்சை கேட்க வேண்டாம்.

அஸ்வினி:
இந்த மாதம் நல்ல பணப்புழக்கமும், பொருளாதார ஏற்றமும் இருக்கும். காரியத் தடைகள் நீங்கி, அனுகூலம் பிறக்கும். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சந்தித்து முறியடிக்கும் வல்லமையைப் பெறலாம்.

பரணி:
இந்த மாதம் வேலையில் உங்கள் தனித்தன்மை வெளிப்படும். எதிரிகளின் இன்னல்கள் இருக்கும் இடம் தெரியாமல் போகும். முன்னேற்றம் கண்டிப்பாக உண்டு என்பதை உறுதியாக சொல்லலாம்.

கார்த்திகை 1 :
இந்த மாதம் குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். தூரத்தில் இருக்கும் உறவினரால் நன்மை ஏற்படும். கணவன், மனைவியரிடையே அவ்வப்போது பிரச்சனைகள் வந்து போகும்.

சந்திராஷ்டம தினங்கள்: 15, 16, 17, அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10, அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – புதன், பரிகாரம்: தினமும் சிவபுராணம் வாசித்து சிவபெருமானுக்கு வில்வமாலை சாற்றுங்கள்.

ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)
கிரகநிலை:
தைரிய வீரிய ஸ்தானத்தில் ராஹூ – சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு, சுக்ரன் – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி – பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது – அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:
15.09.2018 அன்று பகல் 2.06 மணிக்கு புதன் பகவான் சுகஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.17.09.2018 அன்று மாலை 05.16 மணிக்கு சூர்ய பகவான் சுகஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் பஞ்சமாதிபதியை ஆட்சி நிலையில் அமையப்பெறும் ரிஷப ராசி அன்பர்களே, மிகவும் தெளிவாக முடிவுகளை எடுப்பீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் மற்றவர்களுக்கும் நன்மை அளிக்கக்கூடியதாக இருக்கும். தெய்வ அனுகூலம் நிறைந்ததாகவும் இருக்கும். உங்கள் குடும்பத்தில் பெரியவர்களின் ஆசையை நிறைவேற்றி அவர்களின் மனம் குளிரும்படி நடந்து கொள்ள முற்படுவீர்கள்.

குடும்பத்தில் அவ்வப்போது கணவன் – மனைவிக்கிடையே சிறு சிறு பூசல்கள் வந்து கொண்டிருக்கும். சிலருக்கு அடி வயிற்றுவலி ஏற்படும். எனவே உடல்நலனில் அக்கறை செலுத்தி மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது. புதிய வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் அடிக்கடி வந்து போய்க் கொண்டிருக்கும். பழைய வாகனத்தை கொடுத்துவிட்டு புதிய வாகனம் வாங்குவதற்கு முயற்சி செய்வீர்கள். தொழிலில் ஏற்பட்ட தடங்கல்களை களைந்து விடுவீர்கள்.

கார்த்திகை 2, 3, 4
இந்த மாதம் மதிப்பு மரியாதை சுமாராகவே இருக்கும். தந்தை, தந்தை வழி உறவினர்கள் வழியே பிரச்சனைகள் வரலாம். நண்பர்கள் இடத்தில் மனக்கிலேசம் ஏற்படும்.

ரோகிணி 1, 2, 3, 4
இந்த மாதம் செய்யும் வேலையில் உங்கள் தனித் தன்மை வெளிப்படும். காரியங்களை செம்மையாக முடித்து வெற்றிகளைப் பெறுவீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

மிருக சீரிஷம் 1, 2
இந்த மாதம் எதிர்காலத்திற்கு தேவையான முறையான சேமிப்புகளுக்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். தொழில், வீடு, நிலம் ஆகியவற்றில் இருந்து வந்த சுணக்க நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்படும்.

சந்திராஷ்டம தினங்கள்: 18, 19, அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12, அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் – சனி, பரிகாரம்: அருகிலுள்ள சிவாலயத்திற்கு சென்று பைரவரை வணங்கவும்.

மிதுனம்: (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)
கிரகநிலை:
தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ – தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு, சுக்ரன் – களத்திர ஸ்தானத்தில் சனி – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது – லாப ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:
15.09.2018 அன்று பகல் 2.06 மணிக்கு புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுகஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17.09.2018 அன்று மாலை 05.16 மணிக்கு சூர்ய பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுகஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் சுகாதிபதியை ஆட்சி நிலையில் அமையப்பெறும் மிதுன ராசி அன்பர்களே, அதிக கஷ்டங்கள் இருக்காது. உங்கள் பணிகள் அனைத்தும் மிகவும் சுலபமாக நடந்து முடியும். உங்களுக்காக வேலை செய்து கொடுக்க சிலர் முன்வருவார்கள். அவர்களை வைத்து உங்கள் காரியங்களை முடித்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடந்து கொள்வது உங்களுக்கு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.

குடும்பத்தில் வருமானம் அதிகமாக இருந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் அதிகமாக இருக்கும். பிள்ளைகளின் கல்வி விசயத்திற்காக அதிகமாக செலவு செய்ய நேரிடும். ஆரோக்கியம் நல்லபடியாக இருக்கும். குடும்பத்துடன் ஆன்மீக ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உங்கள் கருத்துக்களைக் கொண்டு குடும்பத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். புதிய ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு.

மிருகசீரிஷம் 3, 4
இந்த மாதம் எடுத்த காரியம் அனுகூலத்தை கொடுக்கும். வீடு, மனை ஆகியவற்றை வாங்கும் போது ஒருமுறைக்கு இருமுறை விசாரித்து வாங்குவது மிகச் சிறப்பானதாய் அமையும்.

திருவாதிரை 1, 2, 3, 4
இந்த மாதம் உறவினர்கள் அன்னியோன்யமாக இருப்பார்கள். குடும்பத்தில் கணவன், மனைவியருக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகள் சுமூகமாக மறையும். பிரிந்திருந்த உறவுகள் ஒன்று சேரும்.

புனர்பூசம் 1, 2, 3
இந்த மாதம் வீட்டிற்குத் தேவையானஅனைத்து வசதிகளும்கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். சற்று முயற்சி எடுத்தால் பதவி உயர்வு உங்களை வந்து சேரும்.

சந்திராஷ்டம தினங்கள்: 20, 21, அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14, அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன் – வெள்ளி, பரிகாரம்: பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை சாற்றி வணங்குங்கள்.

கடகம்: (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
கிரகநிலை:
ராசியில் ராஹூ – தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன் – சுக ஸ்தானத்தில் குரு, சுக்ரன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி – களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது – தொழில் ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:
15.09.2018 அன்று பகல் 2.06 மணிக்கு புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17.09.2018 அன்று மாலை 05.16 மணிக்கு சூர்ய பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் தைரியாதிபதியை ஆட்சி நிலையில் அமையப்பெறும் கடக ராசி அன்பர்களே, துணிவுடன் எந்த காரியத்தையும் செய்து முடிக்க நினைப்பீர்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்ட காரியங்களில் எந்த யோசனையும் இன்றி செய்து முடிக்க முடியும் என்ற மனதைரியத்துடன் செய்வீர்கள். அது உங்களுக்கு வெற்றியைத் தருவதாகவும் இருக்கும். தெய்வ அனுகூலம் உங்களை அனைத்து காரியங்களிலும் உடன் இருந்து வழி நடத்தும்.

குடும்பத்தில் மிகவும் ஆர்வமாக செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் பிரச்சனைகளைக் கேட்டு நீங்களே முன்னின்று தீர்த்து வைப்பீர்கள். உடல்நலம் சரியில்லாதவர்களின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். சகோதரர் – சகோதரி யாரேனும் பிரிந்து சென்றிருந்தால் இப்போது ஒன்று சேர்வதற்கு வாய்ப்புள்ளது. உற்றார் – உறவினரின் வருகையால் இல்லம் சந்தோஷத்தில் மூழ்கும்.

புனர்பூசம் 4 :
இந்த மாதம் எதிர்பார்த்திருந்த பணி இடமாற்றம் உங்களை வந்து சேரும். வங்கிக் கடன்கள் கிடைத்து அதன் மூலம் சில பிரச்சனைகளை கட்டுக்குள் வைக்க முடியும்.தொழிலதிபர்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள்.

பூசம்:
இந்த மாதம் நற்சுகமும் பொருளாதார மேம்பாடும் உண்டாகும். நன்மைகள் கிடைக்கும். மதிப்பு, மரியாதை கூடி செல்வாக்கு அதிகரிக்கும். உடல் நலனைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும்.

ஆயில்யம்:
இந்த மாதம் வேலையில்லாமல் தவித்தவர்களுக்கு தகுந்த சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதே நடக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: 22, 23,24, அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16, 17, அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் – வியாழன், பரிகாரம்: திங்கட்கிழமைகளில் அம்மனுக்கு வெள்ளை மலர் அணிவியுங்கள்.

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
கிரகநிலை:
ராசியில் சூர்யன், புதன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு, சுக்ரன் – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி – ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது – பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் – அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:
15.09.2018 அன்று பகல் 2.06 மணிக்கு புதன் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17.09.2018 அன்று மாலை 05.16 மணிக்கு சூர்ய பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் குடும்பாதிபதியை ஆட்சி நிலையில் அமையப்பெறும் சிம்ம ராசி அன்பர்களே, குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு அதிக மதிப்பு இருக்கும். உங்கள் மீதான அக்கறை அதிகரிக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். கணவன் மனைவிக்கிடையே உறவு பலப்படும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடந்து கொள்வது மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

குடும்பத்தில் பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். என்றாலும் செலவுகள் சற்று அதிகரித்து காணப்படும். நீதிமனறத்தில் வழக்குகள் ஏதேனும் இருப்பின் அதில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. வண்டி , வாகனங்களுக்காக புதிய முயற்சி செய்வோர் புதிதாக வாங்கலாம். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேர்வதற்கு வாய்ப்புள்ளது. மொத்தத்தில் முன்னேற்றம் உண்டு.

மகம்:
இந்த மாதம் கணவன், மனைவியிடையே அன்பும், பாசமும் பெருகும். ஏதேனும் ஒரு காரணத்தால் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேருவார்கள். தாயாருடன் இருந்து வந்த மனக்கசப்பு மறையும்.

பூரம்:
இந்த மாதம் மனைவி வழியில் லாபம் உண்டு. உத்தியோகஸ்தர்கள் உத்தியோகம் ஒப்பந்தங்கள் நிறை வேறும். சிலருக்குப் பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

உத்திரம் 1 :
இந்த மாதம் உங்கள் திறமையில் இருந்த பின்தங்கிய நிலை இனி மாறும். வெப்பம் சம்பந்தப்பட்ட உடல் உபாதைகள் குறையும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். செய்யும் வேலையில் மனநிம்மதி உண்டாகலாம்

சந்திராஷ்டம தினங்கள்: 25, 26, அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19, அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன் – சனி, பரிகாரம்: சித்தர்கள் சமாதி சென்று வழிபட்டு வரவும்.

கன்னி: (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)
கிரகநிலை:
தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, சுக்ரன் – சுக ஸ்தானத்தில் சனி – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சந்திரன் – லாப ஸ்தானத்தில் ராஹூ – அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:
15.09.2018 அன்று பகல் 2.06 மணிக்கு புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

17.09.2018 அன்று மாலை 05.16 மணிக்கு சூர்ய பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் ராசியாதிபதியை ஆட்சி நிலையில் அமையப்பெறும் கன்னி ராசி அன்பர்களே, உங்கள் மனம் தெளிவாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த குழப்பங்கள் முடிவுக்கு வரும். முகத்தில் மலர்ச்சியைக் காண முடியும். உங்களின் இஷ்ட தெய்வங்களின் ஆலயத்திற்குச் சென்று வருவீர்கள். பிடித்தவர்களைச் சந்தித்து மனதில் இருப்பவற்றைப் பகிர்ந்து கொள்வீர்கள்.

குடும்பத்தை பொறுத்தவரை அவ்வப் போது பிரச்சினைகள் தலை தூக்கும். பங்காளிகள் பிரச்சினைகளுக்காக காத்திருப்பார்கள். ஆனால் அவர்களிடன் நீங்கள் கோபமின்றி பேசுங்கள். அவர்களே ஆச்சரியமாக ஒதுங்கி விடுவார்கள். கணவன் – மனைவிக்கிடையே பிரச்சினைகள் ஏற்பட்டு பிரிந்திருக்கக் கூடும். புதிய முயற்சிகள் மேற்கொள்ளுவீர்கள். திருமண முயற்சிகளில் ஈடுபடலாம்.

உத்திரம்:
இந்த மாதம் தொழில் செய்வோருக்கு கடந்த காலத்தை விட அதிக வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். லாபம் கூடும். எதிரிகளால் இருந்து வந்த தொல்லை குறையும். அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும்.

ஹஸ்தம்:
இந்த மாதம் முன்யோசனையுடன் திட்டமிடல் அவசியம். தந்தை வழி தொழில் செய்வோருக்கு அதிக லாபம் ஏற்பட வாய்ப்புண்டு. பெண்கள் குடும்பத்தில் நிதானமாக நடந்து கொள்ள வேண்டிய கால கட்டம்.

சித்திரை:
இந்த மாதம் தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த பிணக்கு நிலை மறைந்து உறவு பிரகாசிக்கும். பிள்ளைகளால் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கி நல்லவைகள் நடக்க ஆரம்பிக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: 1, 27, 28, 29, அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21, அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் – வெள்ளி, பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுங்கள்.

துலாம்: (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
கிரகநிலை:
ராசியில் குரு, சுக்ரன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி – சுக ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது – களத்திர ஸ்தானத்தில் சந்திரன் – தொழில் ஸ்தானத்தில் ராஹூ – லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:
15.09.2018 அன்று பகல் 2.06 மணிக்கு புதன் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17.09.2018 அன்று மாலை 05.16 மணிக்கு சூர்ய பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் விரையாதிபதியை ஆட்சி நிலையில் அமையப்பெறும் துலாம் ராசி அன்பர்களே, நிம்மதியான காலகட்டமாக இருக்கும். ஓய்வு எடுப்பீர்கள். உல்லாச பயணங்கள் சென்று வருவீர்கள். நண்பர்களுடன் அதிக பொழுதைக் கழிப்பீர்கள். கடுமையான உழைப்பிற்குப் பிறகு அதற்கான பலனை அடைவீர்கள். அது உங்களுக்கு மனதிற்கு மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கும்.

குடும்பத்தில் குடும்பச் சூழ்நிலை ஓரளவு மனநிம்மதியைத் தரும். நெருங்கிய உறவினர்களிடையே சண்டை, சச்சரவு ஏற்பட்டிருந்தால் இப்போது அது சரியாகி விடும். வீண் செலவுகள் வந்து கொண்டிருக்கும். குடும்ப ரீதியான முடிவுகள் எடுக்க வேண்டுமாயின் அவற்றை சற்று தள்ளிப் போடுவது நல்லது. இல்லத்தில் திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமண ஏற்பாடுகள் கை கூடி வரும். சொத்து பிரச்சினைகள் சாதகமாக முடியும்.

சித்திரை 3, 4 பாதம்:
இந்த மாதம் யாருடனும் கருத்துப் பரிமாற்றங்கள் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை.கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களால் பொருளாதார லாபம் கிடைக்கும். எதிர்பார்த்திருந்த வெற்றி வாய்ப்பு கிடைக்கும். உங்கள் திறமைக்கு மற்றவர்கள் தலை வணங்குவார்கள்.

சுவாதி:
இந்த மாதம் உடனிருப்போரால் பிரச்சனை தோன்றி மறையலாம். சீராக வாழ்க்கை ஓடுவதாக தெரிந்தாலும் அவ்வப்போது குழப்பமான நிலையும் நிலவும். அரசியல்வாதிகள் சமூக நல சேவை புரிபவர்கள் சிறப்படைய மிகுந்த முயற்சி தேவை.

விசாகம் 1, 2, 3ம் பாதம்:
இந்த மாதம் அரசு காரியங்கள் அனைத்தும் அனுகூலமாக இருந்தாலும் எதையும் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து செயல் படுவது உங்களுடைய எதிர்கால வாழ்வுக்கு உறுதுணையாக அமையும்.

சந்திராஷ்டம தினங்கள்: 2, 3, 30, அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23,24, அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் – வியாழன், பரிகாரம்: நவகிரகத்தில் உள்ள சுக்கிரனை வழிபட்டு வாருங்கள்.

விருச்சிகம்: (விசாகம் 4ம் பாதம்,அனுஷம், கேட்டை)
கிரகநிலை:
தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி – தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது – ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் – பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ – தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன் – அயன சயன போக ஸ்தானத்தில் குரு, சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:
15.09.2018 அன்று பகல் 2.06 மணிக்கு புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17.09.2018 அன்று மாலை 05.16 மணிக்கு சூர்ய பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் லாபாதிபதியை ஆட்சி நிலையில் அமையப்பெறும் விருச்சிக ராசி அன்பர்களே, இதுவரை நஷ்டமாக இருந்துவந்த அனைத்தும் லாபமாக மாறும். பண விஷயம் மட்டுமன்றி அனைத்து விஷயங்களிலும் மனம் மகிழும்படியான சூழலே காணப்படும். புதிய முயற்சிகள் கைகூடும். நீங்கள் எதிர்பார்த்திருந்த காரியங்கள் ஒவ்வொன்றாக நல்லபடியாக நடந்து முடியும். அதற்கான முயற்சிகளில் முழு மூச்சுடன் செயல்படுவீர்கள்.

குடும்பத்தில் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதைத் தவிர்த்திடுங்கள். நீங்கள் யதார்த்தமாய் பேசும் வார்த்தைகள் கூட சிலருக்கு மனதை காயப்படுத்தும்படி அமையும். எத்தருணத்திலும் யாருக்காகவும் பரிந்து பேச வேண்டாம். வீடு, மனை, வாகனம் போன்றவை நல்லபடியாக அமையும். உற்றார் – உறவினர் வருகை மனதிற்கு சந்தோசத்தை அளிக்கும். ஆரோக்கியம் நல்லபடியாக முன்னேற்றம் அடையும்.

விசாகம் 4ம் பாதம்:
இந்த மாதம் தூர தேசப் பிரயாணம் ஏற்படும் ஆகையால் சீரான உணவுப் பழக்கத்தை கொண்டு வாருங்கள். மாணவர்கள் மாணவ கண்மணிகளுக்கு அனுகூலமான போக்கே காணப்படுகிறது. எதிலும் வெற்றி காண்பீர்கள். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.

அனுஷம்:
இந்த மாதம் தீவிர முயற்சியின் பேரிலேயே எல்லாவித உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். நண்பர்களுடன் பழகும் போது எச்சரிக்கை தேவை. தேவைகள் பூர்த்தியாகி மதிப்பும் மரியாதையும், அந்தஸ்தும் உருவாகும்.

கேட்டை:
இந்த மாதம் வெகு நாட்களாக தடைப்பட்டு வந்த திருமணத்திற்கு, புதிய வீடு கட்டுவதற்கான வேலைகளையும், இப்பொழுது துவங்கலாம். தடைகள் வந்தாலும் அதையெல்லாம் முறியடிக்க எல்லா வகைகளிலும் உங்களுக்கு ஆதரவு கிடும்.

சந்திராஷ்டம தினங்கள்: 4, 5, அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26, அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – வெள்ளி, பரிகாரம்: செவ்வாய்கிழமைகளில் முருகனுக்கு அரளி மாலை சாற்றுங்கள்.

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
கிரகநிலை:
ராசியில் சனி – தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராஹூ – பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் – லாப ஸ்தானத்தில் குரு, சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:
15.09.2018 அன்று பகல் 2.06 மணிக்கு புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17.09.2018 அன்று மாலை 05.16 மணிக்கு சூர்ய பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் தொழில் அதிபதியை ஆட்சி நிலையில் அமையப்பெறும் தனுசு ராசி அன்பர்களே, நீங்கள் எதிர்பார்த்திருந்த நீண்ட நாளைய ஆசைகள் நிறைவேறும். வரவேண்டிய பணம் வந்து சேரும். அல்லது அதற்கான காரியங்கள் முன்னேற்றப்பாதையில் செல்லும். மனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்கள் தெளிவு பெறும். இதனால குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவும்.

குடும்பத்தில் அவ்வப்போது சில சண்டைகள் வரலாம். நீங்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதன் மூலம் அவற்றைத் தவிர்க்கலாம். ஒருவர் கூறும் அறிவுரையை தட்டாமல் கேட்டுக் கொள்ளுங்கள். எதிர்த்துப் பேசி வீண் சச்சரவுகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். குடும்ப விஷயங்களில் சற்று ஆர்வமுடன் செயல்பட்டால் மனசங்கடங்களைத் தவிர்க்கலாம். கணவன் – மனைவியிடயே கலந்து ஆலோசித்து எந்த காரியத்தையும் செய்வது நல்லது.

மூலம்:
இந்த மாதம் குடும்பத்தில் தாய்வழி உறவினர்களுடன் சின்ன கருத்து மோதல்கள் வரலாம். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். அமைதியாக விட்டுக் கொடுத்து போவதினால் மட்டுமே ஆதாயம் கிடைக்கும்.

பூராடம்:
இந்த மாதம் நீங்கள் நல்வழியில் செல்ல பெரியோர் ஒருவருடன் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும். உத்தியோகஸ்தர்கள் அலைச்சலும், வேலைப்பளுவும் ஓரளவு இருக்கத்தான் செய்யும்.

உத்திராடம் 1ம் பாதம்:
இந்த மாதம் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்கும். சிலர் அதிகார அந்தஸ்திற்கு உயர்த்தப்படுவீர்கள். நீங்கள் சென்ற இடமெல்லாம் அனுகூலம் ஏற்படும்.

சந்திராஷ்டம தினங்கள்: 6, 7, 8, அதிர்ஷ்ட தினங்கள்: 1, 27, 28, 29, அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – புதன், பரிகாரம்: நவகிரகங்களை ஒன்பது முறை வலம் வந்து நல்லெண்ணெய் விளக்கேற்றவும்.

மகரம்: (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)
கிரகநிலை:
ராசியில் செவ்வாய் (வ), கேது – சுக ஸ்தானத்தில் சந்திரன் – களத்திர ஸ்தானத்தில் ராஹூ – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன், புதன் – தொழில் ஸ்தானத்தில் குரு, சுக்ரன் – அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:
15.09.2018 அன்று பகல் 2.06 மணிக்கு புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.17.09.2018 அன்று மாலை 05.16 மணிக்கு சூர்ய பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் பாக்கியாதிபதியை ஆட்சி நிலையில் அமையப்பெறும் மகர ராசி அன்பர்களே, நீண்ட நாட்களாக காத்திருந்தவர்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தைபாக்கியமும் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்திருந்தவர்கள் உங்களை வந்து சேருவார்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் திரும். பிரச்சனை கொடுத்தவர்கள் தானாக விலகி உங்களுக்கு வர வேண்டியதை கொடுக்கும் சூழல் உருவாகும்.

குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். உறவினர்களுடன் கேளிக்கை விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சந்தோஷம் அடைவீர்கள். பயணங்கள் மூலம் லாபம் அடைவீர்கள். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் இனிதே நடைபெறும். கோவில் சார்ந்த பணிகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். மனதில் இருந்த குழப்பங்கள் மாறி நிம்மதி இருக்கும்.

உத்திராடம் 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் உங்கள் நம்பிக்கைக்கு உகந்த ஆளாக ஒருவரை நீங்கள் தேர்வு செய்து அவருடன் மனம் விட்டு பேச முயலுவீர்கள். தொழில் புரிவோருக்கு இருந்து வந்த மந்த நிலை மறையும். படிப்படியாக லாபம் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

திருவோணம்:
இந்த மாதம் புதிய தொழில் தொடங்குவதற்கான வேலைகளுக்கு அரசாங்க அனுகூலம் கிடைக்கும். சிறு தொழில் நடத்துபவர்களுக்கு அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

அவிட்டம் 1,2 பாதம்:
இந்த மாதம் நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற சிறிது போராட வேண்டி வரலாம். தொழில் புரியும் பெண்கள் நல்ல ஆதாயத்தை எதிர்பார்க்கலாம். சேமிப்புகள் அதிகரிக்கும். ஓய்வில்லாமல் உழைத்தாலும் உங்களுக்கு குடும்பத்தில் கிடைக்க வேண்டிய ஆறுதல்கள் கிடைக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: 9, 10, அதிர்ஷ்ட தினங்கள்: 2, 3, 30, அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் – புதன், பரிகாரம்: சனிபகவானுக்கு எள் சாதம் நைவேத்யம் செய்து அனைவருக்கும் விநியோகம் செய்யலாம்.

கும்பம்: (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)
கிரகநிலை:
தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் ராஹூ – களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன் – பாக்கிய ஸ்தானத்தில் குரு, சுக்ரன் – லாப ஸ்தானத்தில் சனி – அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:
15.09.2018 அன்று பகல் 2.06 மணிக்கு புதன் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17.09.2018 அன்று மாலை 05.16 மணிக்கு சூர்ய பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் அஷ்டமாதிபதியை ஆட்சி நிலையில் அமையப்பெறும் கும்ப ராசி அன்பர்களே, வயதானவர்களின் உடல் நிலையில் முன்னேற்றம் இருக்கும். வீட்டில் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் பெரியவர்களின் ஆலோசனை பெற்று நடந்து கொள்வது நல்லது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அனுபவமிக்கவர்களின் ஆலோசனை படி நடந்து கொண்டால் சில சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள்.

குடும்பத்தில் கணவன் – மனைவி உறவு பலப்படும். உங்களுக்குள் இருந்த மனக்கவலைகள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடந்து கொள்வார்கள். பிள்ளைகளுக்கு கல்விக்குத் தேவையானதை செய்து கொடுப்பதன் மூலம் அவர்களின் அன்பைப் பெறுவீர்கள். மனதில் சிறு குழப்பங்கள் அவ்வப்போது ஏற்படலாம். அவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

அவிட்டம் 3, 4 பாதம்:
இந்த மாதம் குடும்பப் பிரச்சனைகளை கட்டுக்குள் வைத்திருப்பீர்கள். கலைஞர்கள் கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான சூழ்நிலை இருக்கும்.

சதயம்:
இந்த மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் கூட இப்பொழுது நல்ல முன்னேற்றத்தைக் காண முடியும். ஏற்கனவே இருந்து வந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதம்:
இந்த மாதம் அரசியல்வாதிகள் மூத்த அறிஞர்களுடன் வாக்கு வாதம் ஏற்படலாம். நீங்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு. தேவையில்லாத இடங்களில் வாக்கை கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம்.

சந்திராஷ்டம தினங்கள்: 11, 12, அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5, அதிர்ஷ்ட கிழமைகள்: ,வியாழன் – வெள்ளி, பரிகாரம்: சனிக்கிழமை தோறும் காகத்திற்கு அன்னமிட்டு வழிபடவும்.

மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
கிரகநிலை:
தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராஹூ – ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன் – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு, சுக்ரன் – தொழில் ஸ்தானத்தில் சனி – லாப ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:
15.09.2018 அன்று பகல் 2.06 மணிக்கு புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17.09.2018 அன்று மாலை 05.16 மணிக்கு சூர்ய பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் களத்திராதிபதியை ஆட்சி நிலையில் அமையப்பெறும் மீன ராசி அன்பர்களே, திருமணம் கைகூடும் காலம். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த சில கருத்து மோதல்கள் முடிவுக்கு வரும். மற்றவர்களிடம் பேசும் போதும் கவனமுடன் வார்த்தைகளை பிரயோகப்படுத்துவது நல்லது. வர வேண்டிய பணம் வந்து சேரும். உடல் நிலையில் முன்னேற்றம் இருக்கும்.

குடும்பத்தில் அடிக்கடி பூசல்கள் வந்து போகும். பூர்வீக சொத்துகள் தொடர்பான வழக்குகள் தள்ளிப் போகலாம். கேட்ட இடத்தில் கடன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உடல் உபாதைகள் வந்து அடிக்கடி தொல்லைகள் தரலாம். முன்னோர்கள் வழிபாடு செய்யுங்கள். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த விசயங்கள் இப்போது ஓரளவிற்கு நடைபெறுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளது.

பூரட்டாதி 4ம் பாதம்:
இந்த மாதம் உங்களுக்கு வேண்டாத சிலரால் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்பு உண்டு. எல்லா இடங்களிலும் கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தை அடையலாம்.

உத்திரட்டாதி:
இந்த மாதம் கடந்த சில நாட்களாக இருந்த மந்த நிலை அடியோடு மாறும். மருத்துவச் செலவு குறையும். ஆசிரியர்கள் இடத்தில் நல்ல பெயரை பெறுவீர்கள்.

ரேவதி:
இந்த மாதம் பிரச்சனைகளை முறியடிக்கும் வல்லமை உங்களை வந்து சேரும். மனதில் நிம்மதியும், ஆனந்தமும் ஏற்படும். உங்கள் முயற்சி அனைத்தும் வெற்றி பெறும். புதிய வீடு, மனை வாங்குவதில் தடைகள் ஏற்படலாம்.

சந்திராஷ்டம தினங்கள்: 13, 14, அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7, 8, அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் – செவ்வாய், பரிகாரம்: நவகிரகத்தில் உள்ள குருபகவானுக்கு நெய் தீபம் ஏற்றுங்கள்.