முன்னணி நடிகரின் படத்தில் இணைந்த சரத்குமார்.! இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு

0
134

நடிகர் சசிகுமார் பல திரைப்படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார், இவர் நடித்த நாடோடிகள் இரண்டாம் பாகம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது, அதுமட்டுமில்லாமல் தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டாவில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் கொம்பு வச்ச சிங்கம்டா, கென்னடி கிளப், ராஜவம்சம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார், இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடித்த சலீம் படத்தை இயக்கிய நிர்மல் குமார் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். கல்பட்டாரு பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தற்காலிகமாக ப்ரோடுக்ஷன் 3 என பெயரிட்டுள்ளனர்.

sarath-kumar
sarath-kumar

இந்த படத்தில் தற்போது சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் இணைந்துள்ளார்.இந்த படத்தில் நடிக்க பாரதிராஜாவும் ஒப்பந்தமாகியுள்ளார். இதனை தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இம்மாதத்தில் 25 நாட்களில் மும்பை நகரில் படமாக்க உள்ளனர். இந்த படத்தில் சரத்குமார் இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.