சிம்ட்டாங்காரன் சாதனையை முறியடித்த விஸ்வாசம்.!

0
105

அஜித் நடிப்பில் விஸ்வாசம் படம் அடுத்ததாக வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் அடிச்சி தூக்கு என்ற பெயரில் சமீபத்தில் வெளியானது.ரசிகர்கள் பெரிதும் இப்பாடலுக்கு எதிர்ப்பார்த்திருந்ததால், பாடல் வந்ததும் யுடியூப்பில் பல சாதனைகளை செய்துவிட்டது. இன்னும் செய்து கொண்டும் இருக்கிறது.

viswasam-thukudurai
viswasam-thukudurai

அச்சாதனைகளில் முக்கியமாக யுடியூப்பில் வெளிவந்து பல சாதனைகளை புரிந்த சர்காரின் சிம்ட்டாங்காரனை ஓரங்கட்டியுள்ளது. சிம்ட்டாங்காரன் பாடல் வெளிவந்து 24 மணிநேரத்தில் 264k லைக்ஸ்களை பெற்றிருந்தது. ஆனால் இந்த லைக்ஸ்களை எல்லாம் அடிச்சி தூக்கு பாடல் வெறும் 50 நிமிடங்களில் பெற்று அசத்தியுள்ளது.

மேலும் #Simtaangaran ஹாஷ்டேக், பாடல் வெளிவந்த 24 மணிநேரத்தில் 221k தடவை உபயோகிக்கப்பட்டிருந்தது. ஆனால் #AdchiThooku ஹாஷ்டேக் 221k எண்ணிக்கையை வெறும் 3 மணிநேரத்தில் பெற்றுள்ளது.