வெளியான 2 நாட்களில் ‘சர்கார்’ செய்த சாதனை

0
159

வெளியான 2 நாட்களில் ‘சர்கார்’ செய்த சாதனை

தமிழில் அட்லியின் ‘மெர்சல்’ படத்திற்கு பிறகு விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம் நேற்று முன் தினம் (நவம்பர் 6-ஆம் தேதி) தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸானது. இந்த படத்தை பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். விஜய்யின் 62-வது படமான இதனை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்தது.

sarkar
sarkar

விஜய்-க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் டூயட் பாடி ஆடியிருந்தார். ராதாரவி, பழ.கருப்பையா, வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இதற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருந்தார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார்.

இப்படம் விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடையேவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் ரிலீஸாகி 2 நாட்களே ஆகியுள்ளது. இந்நிலையில், பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.100 கோடி கல்லா கட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.