பிரமிக்கவைக்கும் சரவணா ஸ்டோர் அண்ணாச்சியின் சின்ன வீடு.! புகைப்படம் உள்ளே

0
146

சரவணா ஸ்டோர் அருள் திருநெல்வேலியில் வாங்கியிருக்கும் சின்ன வீடு குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.

Saravana-Stores
Saravana-Stores

முன்பெல்லாம் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் நடிகைகள் நடித்து வந்தனர். ஆனால் சமீபகாலமாக இந்த நிறுவனத்தின் விளம்பரங்களில் சரவணா ஸ்டோர்ஸ் குழுமத்தின் தலைவர் சரவணனே நடிக்கத் தொடங்கினார்.

Saravana-Stores
Saravana-Stores

சரவணனுக்கு ஜோடியாக ஹன்சிகா, தமன்னா உள்ளிட்ட நடிகைகளும் நடித்தனர்.இந்நிலையில் தற்போது அவர் நாயகனாக நடிக்க முடிவெடுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்காக அவர் கதை கேட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறாராம்.

Saravana-Stores
Saravana-Stores

அவருக்கு பிடிக்கும் கதையில் 2020-ம் ஆண்டு நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் சினிமா இண்டஸ்ட்ரிக்குள் எண்ட்ரி கொடுப்பதை அறித்த அஜித், விஜய், சூர்யா என முன்னணி நாயகர்கள் கலக்கத்தில் இருப்பது தனிக்கதை.

Saravana-Stores
Saravana-Stores

சென்னையில் அண்ணாச்சிக்கு பிரம்மாண்டமாய் பல துணிக்கடை மாளிகைகள் இருப்பதை போல பலகோடி ரூபாய் மதிப்பில் சில சொகுசு வீடுகளையும் கட்டியிருக்கிறார் அருள்.

Saravana-Stores
Saravana-Stores

அதில் தான் தனது குடும்பத்தாருடன் வசித்து வருகிறார் அவர். இவருக்கு திருமணாகி இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இருவருக்கு திருமணமும் முடிந்துவிட்டது.

இந்த நிலையில் தனது சொந்த ஊரான திருநெல்வேலி புறநகர் பகுதியில் பிரம்மாண்டமாய் சின்ன வீடு ஒன்றை கட்டி கிரஹப்பிரவேசம் செய்துள்ளார் அருள். ’லெஜெண்ட் சரவணன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த மாளிகையில் அத்தனை வசதிகளும் உள்ளன.

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் தங்கும் வகையில் மூன்றடுக்கு மாளிகையில் சமையல் அறையே ஆயிரம் கன சதுரடிக்கு மேல் அமைக்கப்பட்டுள்ளது.

Saravana-Stores
Saravana-Stores

உணவருந்தும் அறையில் ஒரே நேரத்தில் ஐம்பதுக்கும் மேலானவர்கள் சாப்பிடும் வகையில் பிரம்மாண்ட டேபிள் விலை உயர்ந்த சேர்கள் போடப்பட்டுள்ளன.

இந்த வீட்டை பார்த்து உள்ளூர்வாசிகள் வாயடைத்துப்போய் கிடக்கிறார்கள். சென்னையில் வசிக்கும் அருள், எப்போதாவது தனது சொந்த ஊரான நெல்லைக்கு சென்றால் இங்கு ஓரிரு நாட்கள் தங்கி ஓய்வெடுக்க இந்த ‘சின்ன வீட்டை’ பிரம்மாண்டமாய் கட்டியுள்ளார்.

Saravana-Stores
Saravana-Stores

அருள் அண்ணாச்சி நடிக்க உள்ள படத்தின் படப்பிடிப்பு நெல்லை பகுதில் நடைபெற இருப்பதாக தகவல். ஆகையால் அவரது இந்த புதிய வீட்டில் ஷூட்டிங் நடத்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது.