சந்திரமுகி 2 உருவாகிறது, அதுவும் 12 வருடம் கழித்து.! இதோ மாஸ் தகவல்

0
183

தமிழில் ரஜினி நடிப்பில் உருவான சந்திரமுகி இந்தியில் பூல் பூலையா எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது பூல் பூலையா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.

ரஜினி நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியானப் படம் சந்திரமுகி. இந்தப்படம் 1993 ஆம் ஆண்டு வெளியான மணிச்சித்திரதாழ் எனும் மலையாளப் படத்தின் ரீமேக் ஆகும். பாபாவுக்குப் பின்னர் 3 ஆண்டு இடைவெளிக்குப் பின் ரஜினி நடித்த இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தொடர்ந்து 820 நாட்கள் ஒரு தியேட்டரில் ஓடி சாதனைப் படைத்தது.

இதனை இந்தியில் 2007 ஆம் ஆண்டு இந்தியில் பூல் பூலையா எனும் பெயரில் ரீமேக் செய்தார் பிரபல இயக்குனர் பிரியதர்ஷன். இந்தி ரீமேக்கில் பாலிவுட் சூப்பர்ஸ்டாரான அக்‌ஷய் குமார், வித்யா பாலன், அமிஷா பட்டேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். அங்கேயும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்து வசூல் சாதனைப் படைத்தது இந்தப்படம்.

இந்நிலையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு பூல் புலையா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தைத் தயாரித்த பூஷண் குமாரே இரண்டாம் பாகத்தையும் தயாரிக்க, முதல் பாகத்தை இயக்கிய பிரியதர்ஷனிடமே இரண்டாம் பாகத்தையும் இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

ஆனால் முதல் பாகத்தில் நடித்த அக்‌ஷய் குமார், அமிஷா படேல், வித்யா பாலன் ஆகியோர் இரண்டாம் பாகத்தில் நடிப்பார்களா என்பது இன்னும் முடிவாகவில்லை. அக்‌ஷய் குமார் இப்போது காஞ்சனா படத்தின் ரீமேக்கில் நடித்து வருவதால் மீண்டும் பேய் படத்தில் நடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.